பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 தமிழ்நூல் தொகுப்புக் கலை 'வனப்பியல் தானே வகுக்குங்காலைச் சின்மென் மொழியால் தாய பனுவலோடு அம்மை தானே அடிநிமிர் பின்றே” என்பது தொல்காப்பியம் - செய்யுளியல் (235-ஆம்) நூற்பா. இதற்குப் பேராசிரியர் வரைந்துள்ள உரையிலிருந்து ஒரு குறிப் பிட்ட பகுதி வருமாறு: "...சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தோடும் அடி நிமிர்வில்லது அம்மை யாம்..” அடிநிமிரா தென்றது, ஐந்தடியின் ஏறா தென்றவாறு. “தாய பனுவலோ டென்றது, அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணஞ் சொல்லு (போன்று) வேறிடையிடை அவையன்றியுந் தாய்ச்செல்வ தென்றவாறு; அஃதாவது, பதினெண் கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள், இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரே செய்யுள் வந்தவாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம் பொருள் இன்பம் என அவற்றுக்கு இலக்கணம் கூறிய பாட்டுப் பயின்று வருமாறும், கார்நாற்பது களவழி நாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க. பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல்' (குறள்-675) என்பது இலக்கணம் கூறியதாகலின் பனுவலோ டென்றான். 'மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள் கண் பலர்காணும் பூவொக்கு மென்று. (குறள்-11.12) என இஃது இலக்கிய மாகலான் 'தாய பனுவல்’ எனப்பட்டது. அம்மை என்பது குணப் பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மை யென்றாயிற்று...' இது பேராசிரியரின் உரைப்பகுதி. இனி நச்சினார்க் கினியரின் உரைப்பகுதி வருமாறு: “...இது முறையே அம்மை கூறுகின்றது. அம்மை குணப் பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையாயிற்று. சின்மையாய் மெல்லியவாய் சொல்லானும் இடையிட்டு