பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு 359 உருவாக்கி விட்டனர், - என்று சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. ஏன்? மேல் இல்லாமல் கீழ் இருக்கமுடியாது; கீழ் இல்லா மல் மேல் இருக்கமுடியாது. எனவே கீழ்க்கணக்கு என்னும் வழக்காறு இருப்பதனால், கீழ்க்கணக்கு அல்லாத இன்னும் பெரிய-நீண்ட வேறு கணக்கு ஏதோ இருக்க வேண்டும் என் பது புலனாகும். மேற்கணக்கு என்னும் பெயரில் இல்லாவிடி னும், வேறு பெயரிலாயினும் இருந்திருக்க வேண்டும். மேற் 7 கணக்கு என்னும் வழக்காறு உள்ள நூற்பகுதி நமக்குக் கிடைக் காமல் போயிருக்கலாம். உரையாசிரியர்கள் பலரும் பதினெண் கீழ்க்கணக்கைக் குறிப் பிட்டுள்ளனரே தவிரப் பதினெண் மேற்கணக்கு என எங்கும் குறிப்பிடவில்லையே என்று வினவலாம். பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் சிறுசிறு நூல்களாக இருந்தமையின் அவற்றை இணைத்து அவ்வாறு குறிப்பிட்டனர். ஆனால் பதினெண் மேற்கணக்கு நூல்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என் னும் இருபெரும் பிரிவினவாய் உள்ளமையின், உரையாசிரியர் கள் பாட்டுக்கள் எனவும், தனித்தனியே குறிப்பிட்டனர்; அத னால் பதினெண் மேற்கணக்கு எனக் குறிப்பிட வேண்டிய சூழ் நிலை அவர்கட்கு இல்லாது போயிற்று. மற்றும், பழந்தமிழ்க் கணக்கில், மேல்வாய் இலக்கம், கீழ் வாய் இலக்கம், மேல்வாய்க் கணக்கு - கீழ்வாய்க் கணக்கு, மேல்வாய்-கீழ்வாய் என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்பட் டமை ஈண்டு எண்ணத்தக்கது. மேலும், தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் கொண்ட நீண்ட பட்டியலுக்கு, நெடுங்கணக்கு" என்னும் பெயர் வழக்காறு உள்ளமையும் ஈண்டு ஒப்பு நோக் கற் பாலது. எண்ணுக்கு ஏற்பட்ட கணக்கு என்னும் பெயர், பின்னர் எழுத்துக்கும் வழங்கப்பட்டது. கணக்கு நூலுக்கு ஏற். பட்ட கணக்கு என்னும் பெயர், பின்னர்ப் பிற நூல்கட்கும் உரியதாயிற்று. p : * இப்போது உலகியலில், ஒர் ஏட்டின் அடியில் எழுதப்படும் சிறு குறிப்பு. கீழ்க்குறிப்பு அல்லது அடிக்குறிப்பு (Foot Notes) என ளழங்கப்படுவதைக் காணலாம். மேலே, விரிவான குறிப்பு