பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு 363 நூல் இன்னிலை என்பதா? கைந்நிலை என்பதா? என்பது பற்றியே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பதினெட்டு நூல் களும் வருமாறு: 1. நாலடியார் 10. திணைமாலை நூற்றைம்பது 2. நான்மணிக்கடிகை 11. திருக்குறள் 3. இனியவை நாற்பது 12. திரிகடுகம் 4. இன்னா நாற்பது 13. ஆசாரக்கோவை 5. கார் நாற்பது 14. பழமொழி 6. களவழி நாற்பது 15. சிறுபஞ்சமூலம் 7. ஐந்திணை ஐம்பது 16. முதுமொழிக்கோவை 8. ஐந்திணை எழுபது 17. ஏலாதி 9. திணைமொழி ஐம்பது.18. இன்னிலை அல்லது கைந்நிலை. இந்தப் பதினெட்டு நூல்களும், இந்த வரிசையில், பின் வரும் பழம் பாடலொன்றின் துணைகொண்டு தரப் பட்டுள்ளன். 'நாலடி நான்மணி நானற்ப தைந்திணைமுப் பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே கைங்கிலைய வாங் கீழ்க் கணக்கு.” என்பது அந்தப் பாடல். இதிலுள்ள நூல் விளக்கம் வரு மாறு:- நாலடி = நாலடியார். நான் மணி=நான் மணிக் கடிகை. நானாற்ப தைந்திணை என்பதை நால் நாற்பது ஐந் திணை எனப் பிரித்து, நால் என்பதை நாற்பது என்பதுடனும் ஐந்திணை என்பதுடனும் தனித்தனியே கூட்டி. நாற்பது பாடல்கள் வீதம் கொண்ட நூல்கள் நான்கு எனவும், ஐந்தி ணைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் நான்கு எனவும், கொள்ள வேண்டும். முதல் நான்கு நூல்கள்: இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்பன. அடுத்த நான்கு: ஐந்திணை ஐம்பது.ஐந்திணை எழுபது, திணை மொழி எழுபது, திணைமாலை நூற்றைம்பது ஆகும். அடுத்து, முப்பால் என்பது திருக்குறள். கடுகம்=திரிகடுகம். கோவை= ஆசாரக் கோவை, பழமொழி=பழமொழி என்னும் நூல். மா மூலம் = சிறுபஞ்ச மூலம். காஞ்சி=முதுமொழிக் காஞ்சி. ஏலாதி