பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு 365 'இன்னிலைய காஞ்சியொ டேலாதி யென்பது உம் கைக்கிலையும் ஆகும் கணக்கு' எனப் பாடங்கொண்டுள்ளனர். இதே கொள்கையுடைய உயர்திரு. வையாபுரிப்பிள்ளை, 'இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி யென்பவும் கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு எனப் பாடம் கொள்ளலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். இதே கருத்துடைய வேம்பத்தூர் முத்து வேங்கட சுப்ப பாரதியார் என்பவர். கி.பி. 1849 - இல் தாம் இயற்றிய 'பிரபந்த தீபிகை என்னும் நூலின் பாடல் ஒன்றில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பின்வருமாறு தெரிவித்துள்ளார் : 'ஈரொன் பதின்கீழ்க் கணக்கினுட் படும்வகை இயம்பு நாலடி நானூறும் இன்னாமை நாற்பது நான்மணிக் கடிகை சதம் இனிய நூற்பான் காரதே ஆருகள வழிநாற்ப தைந்திணையு மைம்பதும் ஐம்பதுட னிருபானு மாம் அலகிலா சாரக் கோவை சதம் திரிகடுகம் ஐயிருப தாகு மென்பர் சீருறும் பழமொழிகள் நானூறு நூறதாம் சிறுபஞ்ச மூலம் நூறு சேர்முது மொழிக்காஞ்சி ஏலாதி எண்பதாம் - சிறு கைக் கிலை அறுபதாகும் வாரிதினை மாலைநூற் றைம்பதாம் தினைமொழி வழுத்தைம்ப தாம் வள்ளுவ மாலையீ ரொன்பதாய்ச் சாற்று பிரபந்தம் வழுத்துவர்கள் புலவோர்க ளே.” இப் பாடலில், பதினெண் கீழ்க்கணக்கு நூல் ஒவ்வொன் திலுமுள்ள மொத்தப் பாடல்கள் பெரும்பாலும் தரப்பட் டுள்ளன. கைந்நிலையில் அறுபது பாடல்கள் இருப்பதாக இப் பாடல் அறிவிக்கிறது. இன்னிலை, கைந்நிலை என்னும் நூல்களுள் எது பதி னெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்தது என நாம் தீர்மானிக்க