பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தமிழ் நூல் தொகுப்புக் கலை பொய் பிறந்தது புலவர்வாயிலே: 'நெய் பிறந்தது பசுவின் பாலிலே நொய் பிறந்தது அரிசி நுனியிலே கை பிறந்தது தோளில் கடையிலே பொய் பிறந்தது புலவர் வாயிலே” என்னும் பாட்டைப் பாட்டனார் பன்முறை சொல்லக் கேட்ட துண்டு. 'பொய் பிறந்தது புலவர் வாயிலே, என்னும் தொடர், புலவர்கள் பொய்யர்கள் -பொய் சொல்பவர்கள் என்னும் கருத்தையா அறிவிக்கிறது? இல்லை. மேலுக்கு அவ்வாறு தோன்றினும், இங்கே பொய்' என்பது கற்பனையைக் குறிக் கிறது. கற்பனை நயம் அமைந்திருப்பது பாடலுக்குச் சிறப் பிலக்கணம் அல்லவா? நாளடைவில் புலவர் சிலரின் பாடல் களில் கற்பனை வரம்பு கடந்து எல்லை மீறிப் போய்விட்ட தால், அந்தக் கற்பனைச் செய்தியை நம்ப முடியாமல் பொய்' என்று எண்ண வேண்டியதாயிற்று. இத்தகைய அண்டப் புளுகு- ஆகாயப் புளுகு கற்பனைகள் பண்டைக் காலத்தில் இருந்ததில்லை, இவை பிற்காலத்துச் சரக்குகளே! இவற்றைக் கொண்டு, புலவர்களைப் பொய்யர்கள் என்று எண்ணி விடலாகாது. கற்பனை பாடலுக்கு உயிர் நாடி. கவிஞன் எனப்படும் பாவலன், இயற்கை யமைப்பையும் வாழ்கை நடைமுறை யினையும் உற்று நோக்கித் தன் கற்பனை வாயிலாக அவற்றுக்கு மறு உருவம் தந்து அவற்றை மறுபடைப்புச் செய்து காட்டு கிறான். அதனால் பாவலனை, படைப்பவன், (Maker) எனச் சொல்வது மரபு. பாடலை முற்றும் அறிவியல் (விஞ்ஞானக்) கண்கொண்டு பார்க்கலாகது. பாவலனுக்கும் பகுத்தறிவு உண்டு. ஆனால் அவன் கற்பனை நயத்தை நம்பிக் காலங்கழிப்பவன். ஆனால் இங்கே கற்பனை என்பது, உள்ளதை இல்லாததாகவும் இல்லாததை உள்ளதாகவும் கூறும் பொய்யன்று. பாவலனும் உள்ளதைத் திரிக்காமல் உள்ளபடியேதான் கூறுகின்றான், ஆனால் அதனை ஒரளவு அணிசெய்து (அலங்காரப் படுத்திக்) கூறுகிறான், அதனைத்தான் கற்பனை என்கிறோம்.