பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 தமிழ் நூல் தொகுப்புக் கலை வேண்டும். நால்டி நான்மணி என்னும் பழைய வெண்பா, ஒலைச் சுவடிக்கு ஒலைச்சுவடி வேறுபட்டிருப்பதால், அறிஞர் களிடையே குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளது. இன்னிலை கொள்கையைச் சேர்ந்தவர்கள் சிலர் வருமாறு: தி.சு. பாலசுந்தரம்பிள்ளை (இளவழகனார்), ந.மு.வேங்கடசாமி நாட்டார், வா.மகாதேவமுதலியார், த.மு. சொர்ணம்பிள்ளை, வ.உ.சிதம்பரம்பிள்ளை, செவ்வக் கேசவராய முதலியார் முதலி யோர் ஆவர். இனிக் கைந்நிலை கொள்கையைச் சேர்ந்தவர்கள் சிலர் வருமாறு:-பு.சி. புன்னைவனநாத முதலியார், அ.நடராச பிள்ளை, களத்தூர் வேதகிரி முதலியார், த.கனகசுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, ரா.இராகவையங்கார், உ.வே. சாமிநாதையர், வை.அனந்தராமையர், எஸ்.வையாபுரிப் பிள்ளை, வேம்பத்தூர் முத்து வேங்கடசுப்பபாரதி முதலி யோர் ஆவர். மேற்கூறிய அனைவரும் உரையாசிரியர்கள் அல்லது பதிப்பாசிரியர்கள், அல்லது நூலாசிரியர்கள், அல்லது எல்லா ஆசிரியர்களுமாவர். இந்நிலையில் நாம் எந்தக் கொள் கையை ஏற்றுக் கொள்வது? இன்னிலையா யிருந்தா லென்ன? கைந்நிலையாயிருந்தா லென்ன? பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும், 'நாலடி நான் மணி’ என்னும் பழைய வெண்பாவினை அடிப்படையாகக் கொண்டே பெயர் கூறப்பட்டுள்ளன. அந்த வெண்பாவின்படி நோக்கின் இன்னிலை என்ற கொள்கைகையே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. சிலர் இன்னிலையை நீக்கிவிட்டு, மெய்ந் நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே என்று பாடம் கூறு கின்றனர்; இதில் மோனையில்லை யாதலின் இது சரியன்று. சிலர் நன்னிலையதாகும் கணக்கு எனக் கூறுகின்றனர்; இதி லும் மோனையில்லை யாதலின் இஃதும் சரியன்று. நடுநிலை யுடன் நோக்கின், மூன்றாம் அடியின் இறுதியில் என்பவே (என்று சொல்லுவர்) என்றிருப்பதால், மூன்றாம் அடிக்குள் ளேயே பதினெட்டு நூல்களையும் சொல்லி விட்டதாகக் கொள் வதே பொருந்தும். எனவே, நாலாவது அடியிலுள்ள கை ந் நிலையவாம்’ என்பதை, கீழ்க்கணக்கு என்பதன் அடைமொழி யாகவே கொள்ளவேண்டும். அஃதாவது, - சிறிய அளவின வாகிய சிறிய அளவுப்பாடல்களை உடையனவாகிய' என்னும்