பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 தமிழ்நூல் தொகுப்புக் கலை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருவாறு பின்வரு மாறு வரிசைப் படுத்தலாம்: 1. திருக்குறள் 10. ஐந்திணை ஐம்பது 2. நாலடியார் 11. ஐந்திணை எழுபது 3. பழமொழி 12. திணைமொழி ஐம்பது 4. திரிகடுகம் 15. திணைமாலை - நூற்றைம்பது 5. நான்மாணிக்கடிகை 14. கார் நாற்பது 6. சிறுபஞ்ச மூலம் 15. களவழி நாற்பது 7. ஏலாதி 16. இன்னா நாற்பது 8. முதுமொழிக் காஞ்சி 17. இனியவை நாற்பது 9. ஆசாரக் கோவை 18. இன்னிலை (அல்லது -கைந்நிலை) இந்த வரிசைமுறை முற்றமுடிந்த முடிபன்று. ஒரளவேனும் பொருத்தமாயிருக்க வேண்டும் என்று கருதி அமைக்கப்பட்ட ஒரு சார் வரிசையமைப்பே இது. மற்றும், இன்னிலையும் கைந் நிலையும் ஒன்று என்று கூறுவாரும் உளர் என்னும் வியத்தகு செய்தியும் ஈண்டு அறியத்தக்கது. காலம்: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தைத் திட்ட வட்டமாய் வரையறுத்துக் கூறவியலாது. இவையனைத்தும் ஒரேகாலத்தில் இயற்றப்பட்டவையல்ல. சில சங்ககாலத்திலும், சில சங்கத்தை யொட்டிய பிற்காலத்திலும் இயற்றப்பட்டன. சங்க காலத்திற்குப் பின், இந்தப்பதினெட்டையும் இணைத்துப் பதினெண் கீழ்க்கணக்கு' என்னும் தொகைப் பெயர் தந்துள்ளனர். இம்மட்டோடு கீழ்க்கணக்கின் காலக்கணக்கை நிறுத்திக் கொள்ளலாம். நூல் விவரம்: இனி, ஒவ்வொரு நூல் பற்றிய விவரமும் முறையே சுருக்கமாக வருமாறு : 1. திருக்குறள்: ஆசிரியர் திருவள்ளுவர்; 1330 குறள் வெண்ப்ாக்களைக் கொண்டது; அறத்துப்பால், பொருட்