பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெண் கீழ்க்கணக்கு 371 வருகையைப் பற்றிக் கூறும் நாறயது பாடல்கள் கொண்டது இந்நூல். 15. களவழி நாற்பது: ஆசிரியர் பொய்கையார், சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சோழன் செங்கணான் பொருது வென்ற போர்க்களச் சிறப்பைப் பற்றிய நாற்பது பாடல்கள் கொண்ட நூல் இது. பொய்கையார் களம்பாடிச் சிறைவைக்கப்பட்ட சேரனை வீடு கொண்டாராம். 16, இன்னர் நாற்பது: கபிலர் இயற்றியது. இன்னா= துன்பம்; இனிமையில்லாதவை. இனியிைல்லாத - துன்பம் தரத்தக்க செய்திகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நாற்பது பாடல்கள் உடையது இது, இந் நூற் பாடல்களில் இன்னா என் லும் சொல் நிரம்ப இடம் பெற்றிருக்கும். 17. இனியவை நாற்பது: பூதஞ் சேந்தனார் இயற்றியது. நன்மை பயக்கும் இனிய செய்திகளைக் கூறும் நாற்பது பாடல்கள் கொண்டது இந்நூல், பாடல்களில் இனிது’ என்னும் சொல்லை நிரம்பக் காணலாம். 18. இன்னிலை: இந்நூலை 1915 - இல் பதிப்பித்த திரு. வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் இந்நூற் பாடல்களைப் பொய்கையார் பாடியதாகவும், கடவுள் வாழ்த்தைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியதாகவும், மதுரையாசிரியர் என்பவர் இந்நூலைத் தொகுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நூல் நாற்பத்தைந்து வெண்பாக்கள் கொண்டது. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பற்றியது. மேலே பதினெட்டு நூல்கள் பற்றிய விவரங்கள் சுருக்க மாகத் தரப்பட்டுள்ளன. கைந்நிலை என்னும் நூலையே ஏற்றுக் கொள்பவர்கட்காக, அதுபற்றிய விவரமும் ஒரு சிறிது வருமாறு: கைங்கிலை: ஐந்திணைகளைப் பற்றிய அறுபது வெண் பாக்கள் கொண்ட் அகப்பொருள் நூல் இது. ஆக்ரியர்: மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங் காடனார் என்பவர். இதுகாறும், பதினெண் கீழ்க் கணக்கு' என்னும் தொகைப் பெயரை அடிப்படையாக் கொண்டு உரிய