பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலடியார் 373 மூன்று பால்களும், ஒவ்வொரு பாலிலும் பல தலைப்புக்களும் (அதிகாாங்களும்), ஒவ்வொரு தலைப்பிலும் பத்துப் பத்துப் பாடல்களுமாக நாலடியார் வடிவமைக்கப் பெற்றுள்ளது. எனவே நாலடியாரில், பத்துப் பத்துப் பாடல்கள் கொண்ட நாற்பது தலைப்புக்கள் உள்ளன என உணரலாம். நூல் தொகுப்பு வரலாறு: மதுரையில் எண்ணாயிரம் சமண முனிவர்கள் ஆளுக்கு ஒரு பாடலாக எழுதிவைத்துவிட்டுப் போன எண்ணாயிரம் பனை யோலைச் சுவடிகஐை. என்னவோ குப்பை என எண்ணிப் பாண்டிய மன்னன் வைகையாற்றில் எறியச் செய்ய. அவற்றுள் நானூறு பாடல்கள் மட்டும் எதிர்த்து நீந்திக் கரையேறி வந்த தாகவும், அவற்றின் அருமை யுணர்ந்து அவற்றைத் தொகுத்து 'நாலடியார்' என்னும் பெயருடைய நூலாக்கியதாகவும் கதை கூறப்படுகிறது. ஆமாம்-கதையேதான் இது! இந்தக் கதையிலிருந்து நாம் அறியக் கூடிய கருத்தாவது:'திருக்குறள் திருவள்ளுவர் என்னும் ஒருவராலேயே இயற்றப் பட்டதுபோல நாலடியார் ஒருவராலேயே இயற்றப்படவில்லை : பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பே நாலடியார்-என்ப தாகும். நாலடியார், பதுமனார் என்னும் புலவரால் தொகுக் கப் பெற்றதாகச் சொல்லப் படுகிறது. எனவே, நாலடியார் ஒரு தொகைநூல் என்பது போதரும். புதுக் கொள்கை: 'பலர் பாடல்களின் தொகுப்பு நூல் நாலடியார்’ என்னும் கருத்து இதுகாறுங் கூறப்பட்டு வந்தது. இப்போது ஒரு புதுக்' கருத்துப் புகலப் படுகிறது. அஃதாவது,- நாலடியார் பலர் பாடல்களின் தொகுப்பு அன்று; நக்கீரர் என்னும் ஒரே புலவ ரால் இயற்றப்பெற்ற நூலே நாலடியார்; இந்த உண்மை யாப்பருங்கல விருத்தியுரையிலிருந்து அறியப்பட்டுள்ளது'.என் பதே அந்தப் புதுக் கருத்தாகும். யாப்பருங்கல விருத்தியுரையால் கிடைக்கும் குறிப்புத் தவறாகவும் இருக்கலாம். பொதுவாக நாலடியாரின் அமைப் பினை நோக்குங்கால், நானூறு பாடல்களும் ஒருவராலேயே