பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 தமிழ் நூல் தொகுப்புக் கலை பாடப்பட்டனவாகத் தோன்றவில்லை.சில கருத்துக்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளன. சில கருத்துக்கள் முரணா யுள்ளன. திருக்குறளில் ஒவ்வொரு தலைப்பையும் சேர்ந்த பத்துப் பத்துப் பாடல்களும் அந்தந்தத் தலைப்போடு பொருந்தி யுள்ளன. ஆனால், நாலடியார் முழுவதையும் கூர்ந்து நோக் கின் சில பாடல்கள் தலைப்போடு பொருந்தாதிருப்பதை அறிய லாம். இதிலிருந்து தெரிவதாவது :- நானுறு உதிரிப் பாடல் களையும் பத்துப் பத்துப் பாடல்கள் வீதம் எப்படியாவது நாற் பது தலைப்புக்களின் அடக்கிவிட வேண்டும் என ஒருவர் திட்ட மிட்டுச் செய்து தொடுத்தமைத்துள்ளார்' - என்பதுதான். அறிஞர்கள் மிகவும் ஆராய வேண்டிய செய்தி இது. ஏன், யாப்பருங்கல விருத்தியுரைப் பகுதியையே சிறிது ஆராய்ந்து பார்ப்போமே! யாப்பருங்கல விருத்தியுரையின் பவானந்தம் பிள்ளை பதிப்பில், செய்யுளியலிலுள்ள செப்பல் இசையன வெண்பா' என்னும் (4 - ஆம்) நூற்பாவின் உரை யிடையே, சில வெண்பாக்கள் எடுத்துக்காட்டுக்களாகத் தரப் பட்டுள்ளன. இறுதி வெண்பா, அரக்காம்பல் நாறும் வாய்' என்னும் நாலடியார்ப் (396) பாடலாகும். இதன் கீழ்ப் பின் வருமாறு எழுதப்பட்டுள்ளது: - "இன்னவை பிறவும் நக்கீரர் நாலடி நானூற்றில் வண்ணத் தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை, பிற வும் அன்ன.” இந்தப் பகுதியில், நக்கீரர் நாலடி நானூறு' என்றிருப் பதைக் கொண்டு, நானூறு பாடல் கொண்ட நாலடியாரை நக்கீரர் இயற்றினார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். இந்த உரைப் பகுதியை ஊன்றி நோக்க வேண்டும். இன்னவை பிற வும்; என்னும் தொடர், மேலே உள்ள நாலடியார்ப் பாடல் முதலியவற்றைக் குறிக்கிறதெனவும், நக்கீரர் நாலடி நானுாற் றில் வண்ணத்தால் வருவனவும்; என்னும் தொடர் மேலே யுள்ள நாலடியார்ப் பாடல் முதலிய வற்றைக் குறிக்காமல் வேறு ஏதோ ஒரு நூற்பாடலைக் குறிக்கிறதெனவும் உய்த் துணரலாம். இந்த உரைப் பகுதியேகூட, தமிழக அரசின் கீழைக்கலை