பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 15 திருமணக் கோலத்துடன் ஊர்வலம் செல்லும் மணப் பெண்ணுக்குச் செய்யப் பெற்றுள்ள ஒப்பனை போன்றது கற்பனை. அந்தப் பெண் பழையவள் பழையவள்தான்! ஆனால்,இப்போது புதிய உருவம் பெற்றுப் புதியவளாயத் திகழ் கின்றாள். இவ்வாறே, உள்ளபடி உள்ள நிகழ்ச்சிக்குக் கற்பனை யின் வாயிலாகப் புது உருவம் கொடுக்கிறான் பாவலன். இந்தக் கலையில் கைதேர்ந்த பாவலர்கள் புதிய சமுதாயத் தையே - புதிய உலகத்தையே படைக்கவும் முடியும். கற்பனை கலந்த கருத்துக்களின் வாயிலாகப் புதிய உலகைப் படைப்பது தானேபாடற்கலையின் உயர் எல்லை! - பாவலன் ஒரு தனி மாந்தனே! ஆனால் அவன் மன்பதை யுள் (சமுதாயத்துள்) ஒருவனாதலின், அவனது உள்ளத் தெழும் கற்பனை, அவன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பழகும் மன்பதையின் (சமுதாயத்தின்) சூழ்நிலையை அடித்தளமாகக் கொண்டதாகவே இருக்க முடியும். எனவேதான், அவன், தன்னைச் சூழ்ந்துள்ள மன்ப்தையைத் தனது கற்பனையால் கவர்ந்து, தன்னுடன் அழைத்துச் சென்று, அவரவர் வேற்றுமை களை மறந்து உயரிய உள்ளப் பண்புடன் ஒன்றுபடச் செய் கிறான். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறநானூற் றுப் பாடல் (192) இதற்குப் போதிய சான்றாகும். வர்ழ்க்கை என்னும் மாபெருங் கடலிடையே தனித்தனித் திட்டுக்கள் போல் பிரிந்து நிற்கும் மக்கள் இனம், உயரிய பாடல்களின் வாயிலாக நாம் எல்லாமும்” ஒரிடத்து மக்களே என்று ஒரு சிறுபொழுதாயினும் உணரக்கூடும்’-என்று மாத்தியூ ஆர்னல்டு' Mathew Arnold) என்னும் அறிஞர் கூறியிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. இதுகாறுங் கூறியவாற்றால், பாவலர்கள் பாடல்களில் கையாளும் கற்பனை நயத்தின் சிறப்பு நன்கு புலனாகும் சில பாடல்களிலுள்ள நம்பத்தகாத பொய்யான கற்பனைகளைக் கொண்டு, பாடற் கலையினையே பழிக்கத் தொடங்கிவிடக் கூடாது என்பதை அறிவுறுத்தவே இவ்வளவு எழுத நேர்த்தது பொய் பிறந்தது புலவர் வாயிலே' என்னும் தொடரில் உள்ள உண்மையை உள்ளவாறு புரிந்து கொள்ள வேண்டும்.