பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திருவள்ளுவ மாலை தனி நூற்பெருமை திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிறப்புக்களைக் கூறும் உதிரிப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை யாகும். இந் நூலில், புலவர்கள் ஐம்பத்தைவர் இயற்றிய ஐம்பத்தைந்து பாடல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. ஒரு நூலின் சிறப்புக்களைப் பாராட்டி கூறும் பாடல் களைச் சிறப்புப் பாயிரம் என வழங்குதல் மரபு. அவ்வாறு பார்த்தால், திருவள்ளுவ மாலையைத் திருக்குறளின் சிறப்புப் பாயிரம் எனக் கூறவேண்டும். ஆனால், அங்ங்னம் கூறப்பெறா மல். திருவள்ளுவ மாலை என்னும் தனி நூற் பெயராக வழங்கப்படும் அளவிற்கு இத் தொகுப்பு உயர்ந்துள்ளது. திருவள்ளுவ மாலையில் உள்ள ஐம்பத்தைந்து பாடல்களுள் முதல் பாடல் அசரீரி என்ற பெயரிலும், இரண்டாம் பாடல் நாமகள் என்ற பெயரிலும் உள்ளன. மற்ற ஐம்பத்து மூன்று பாடல்களும் இறையனார் முதல் ஒளவையார் ஈறாக உள்ள ஐம்பத்து மூன்று சங்கப் புலவர்களால் பாடப்பெற்றவை யாகும். முதல் இரு பாடல்களும் முறையே அசரீரியாகவும் நாம களுடையதாகவும் இருக்க முடியாது: யாரோ ஒருவரால் கற் பனையாக எழுதிச் சேர்க்கப்பட்டவையே இவை' என்பது சிலர் கருத்து. இந்தக் கருத்து உண்மையாகவும் இருக்கலாம். இருந்து போகட்டுமே! சங்கப் புலவர்கள் - பலருடைய பாராட்டுப் பாடல்களைக் கண்ட யாரோ ஒருவர் அசரீரி பெயராலும் நாமகள் பெயராலும் புகழ்ச்சிப் பாடல்கள் புனைந்துவிட் டார் போலும்! தொகுப்பு நூலே இவ்விரு பாடல்கள் தவிர, மற்றப் பாடல்களையும் பிற் காலத்தார் யாரோ ஒருவர் இயற்றிப் பெருமைக்காகச் சங்கப் புலவர்கள் பெயர்களைப் பொய்யாகச் சூட்டி விட்டார் எனச் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதற் கில்லை. கபிலர், பரணர், நக்கீரர், மாமூலனார், சீத்தலைச்