பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/405

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவள்ளுவ மாலை 381 சாத்தனார், மருத்துவன் தாமோதரனார், பொன்முடியார், ஒளவையார் முதலிய சங்கப் புலவர்கள் இயற்றிய பாராட்டுப் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலையாகும். இப் பாடல்களுக்குள் சிற்சில வகையான கருத்து வேறுபாடுகள் இருப்பதால், இவை அனைத்தையும் ஒருவரே இயற்றியிருக்க முடியவே முடியாது. பல்வேறு புலவர்கள் இயற்றியிருப்பதால் தான் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. கருத்து வேறு பாடு என்றால், திருவள்ளுவரின் பெருமையைச் சொல்வதில் கருத்து வேறுபாடு இல்லை; திருக்குறளின் அமைப்புப் பற்றி வெளியிடுவதிலேயே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன திருக்குறளின் அமைப்பினைப் பற்றிக் கூறியிருப்பதில் சங்கப் புலவர்கள் சனி யீசுவரன் கோயில் சாமிகள் போல் காட்சி யளிக்கின்றனர். அக் கோயிலில் ஒன்று கிழக்கே பார்க்கும்; மற்றொன்று மேற்கே பார்க்கும்; இன்னொன்று தெற்கே பார்க்கும்; மற்றொனறு வடக்கே பார்க்கும். இவ் வாறே, இப் புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவை புலவர் பெயர்களுடனும் பாடல் எண்களுடனும் முறையே வருமாறு; (1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளுடையது. (கல்லாடர்-9; சீத்தலைச் சாத்தனார்10; மருத்துவன் தாமோதரனார்-11; நாகன் தேவனார் - 12; கோதமனார்.15; முகையலூர்ச் சிறுகருத் தும்பியார் - 19; பாரதம் பாடிய பெருந்தேவனார்-30; உருத்திர சன்ம கண்ணர் -31; உறையூர் முது கூற்றனார்-39; அக்காரக் கனி நச்சுமனார் -46; தேனிக் குடிக் கீரனார்-49; ஆலங்குடி வங்கனார்.53.) (2) திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவுகளுடையது. (நக்கீரனார் - 7: மாமூலனார் - 8 சிறு மேதாவியார்-20; நரி வெரூஉத் தலையார் - 33; இழிகட் பெருங்கண்ணனார் - 40) - (3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கியிருக் கிறார். (தொடித்தலை விழுத்தண்டினார்-22; களத்தூர்க் கிழார்-44).