பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/406

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


382 தமிழ் நூல் தொகுப்புக் கலை (4) திருவள்ளுவர் வேதக் கருத்தைத் தமிழில் எழுதி னார். (உக்கிரப் பெருவழுதியார் - 4; காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்.28; மதுரைப் பெரு மருதனார் - 37; செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்-42). (5) திருவள்ளுவர் திருக்குறளைத் தாமாகவே, தம் சொந்த அறிவு-பட்டறிவுத் திறமையின் துணைகொண்டே செய்தார். (நக்கீரனார்-7.) (6) திருக்குறளின் முதலிலுள்ள பாயிரம் என்னும் பகுதியே வீட்டுப்பால் ஆகும். (சிறு மேதாவியார்-20.) (7) நான்கையும் இன்பம் (காமம்), பொருள், அறம், வீடு என்னும் முறையில் வரிசைப் படுத்தி யமைத்தல். (நரிவெரூஉத் தலையார் - 33.) . (8) பொருட்பால் ஏழு பிரிவுகளையுடையது. (தொடித் தலை விழுத்தண்டினார்-22; போக்கியார் - 26). ஆனால், உரையாசிரியர்களுள் மணக்குடவர் ஆறு பிரிவாகவும் பரிமேலழகர் மூன்று பிரிவாகவும் பிரித்துக் கொண்டுள்ளனர். (9) காமத்துப்பால் மூன்று பிரிவுகளுடையது. (தொடித் தலை விழுத்தண்டினார் -22; மோசிகீரனார்-27). ஆனால், உரையாசிரியர்கள் இருவரும் இரண்டாகப் பிரித்துள்ளனர். (10) ஒரு கடுகைத் துளைத்து அதனுள் ஏழு கடலைப் புகட்டினாற் போன்றது திருக்குறளின் கருத்துச் செறிவு என இடைக்காடனார் கூறியுள்ளார் (பாடல் - 54). ஆனால், ஒர் அணுவைத் துளைத்து அதனுள் ஏழுகடலைப் புகட்டினாற் போன்றது குறளின் கருத்துச் செறிவு என ஒளவையார் கூறி யுள்ளார் (பாடல் - 55), புலவர்க்குப் புலவர் மாறுபட்டுக் கூறியுள்ள பத்துக் கருத் துக்கள் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எல்லாப் பாடல் களையும் ஒருவரே இயற்றியிருப்பின், இவ்வளவு மாறுபாடு கட்கு இடம் இருக்க முடியுமா? இதனை நன்கு எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, திருவள்ளுவ மாலை ஒருவர் இயற் றியதன்று; பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு நூலேஎன்பது நன்கு தெளிவாகும்.