பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரிய மாலை 385 வைப் போட்டிபோட்டுச் சிறப்பித்துள்ளனர். திருக்குறளுக்கு எவ்வளவு பெருமை உண்டோ அவ்வளவு பெருமையினையும் சங்கப் புலவர்கள் கூறத் தவறவில்லை. திருக்குறள் இப் பொழுது என்னென்ன சிறப்புக்கள் பெற்றுள்ளதோ-எவ்வெவ் வகையில் உலகத்தாரால் பாராட்டிப் பயன்படுத்தப் படுகின் றதோ-அவை யனைத்தையும் சங்கப் புலவர்கள் அப்பேர்தே முன்கூட்டி பறிந்து வைத்துத் திருவள்ளுவ மாலையில் அறிவித் துள்ள அரும் பெருந்திறனைத் திருவள்ளுவ மாலையைக் கற்பவர்கள் நன்கறிவர். 'என்றும் புலராது யாணர்நாட் செல்லுகினும் கின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மைய தாய்” (இறையனார்-3); "வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார் உள்ளுவவெல் லாம் அளந்தார் ஒர்ந்து'-(பரணர்:6): 'தந்தான் உலகிற்குத் தான் வள்ளுவனாகிய" (காரிக் கண்ணனார்-28); 'வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள்' (நரி வெரூஉத் தலையார்-33); "...உலகடைய உண்ணுமால் ... " வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து'. (ஆலங்குடி வங்கனார்-53). இந்தப் பாடற் பகுதிகளால், திருக்குறள் என்றும் அழி யாத புத்தம்புதிய உலகப் பொதுநூல் என்பது புலப்படும். இத்தகைய சரியான கணிப்பின் வாயிலாகத் திருவள்ளுவ' மாலையின் மாண்பு மிகவும் உயர்ந்து காணப்பெறுகிறது. - 31. ஆசிரிய மாலை நூல் அறிமுகம்: கடைச் சங்க காலத்தை யடுத்த நூல்களுள் ஒன்றாக ஆசிரிய மாலையைக் குறிப்பிடலாம். இது பல ஆசிரியப்பாக்'