பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 தமிழ் நூல் தொகுப்புக் கலை களின் தொகுப்பு நூல் என்பது பெயரிலிருந்தே தெரிகிறது. பலர் பாக்களின் தொகை நூலாகக் கருதப்படும் இந்நூல் இப் பொழுது முழுவதும் கிடைக்கவில்லை, பதினைந்தாம் நூற் றாண்டிலோ அல்லது அதற்கு முன்போ தொகுக்கப்பட்ட தாகக் கருதப்படும் புறத்திரட்டு என்னும் நூலில், ஆசிரிய மாலை எனப் பெயர் குறிப்பிடப்பட்டுப் பதினாறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் புறத்திரட்டு என்னும் தொகை நூல் இல்லையேல் ஆசிரிய மாலை என்னும் நூற் பெயரை அறிந்து கொண்டிருக்க முடியாது. புறத்திரட்டில் உள்ள ஆசிரிமாலைப் பாடல்கள் அறன் வலியுறுத்தல், தவம், நிலையாமை, கொடுங்கோன்மை, நிரை கோடல், இராமகாதை முதலிய பல்வேறு பொருள் களைப் பற்றியனவாயிருத்தலின், பல்வேறு காலத்தில் பல் வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்கள் பலரால் இயற்றப்பெற்ற பல உதிரி ஆசிரியப் பாக்களின்தொகுப்பு நூல் இது - என்னும் செய்தி உறுதியாகிறது. வெண்பாவால் ஆன புறப் பொருள் வெண்பாமாலை என்னும் நூல் வெண்பா மாலை' என வழங் கப்படுவது போல, ஆசிரியப் பாவாலான இந்நூல் ஆசிரிய மாலை என வழங்கப்பட்டுள்ளது. மேற்கோள் ஆட்சி: ஆசிரிய மாலைப் பாடல்களைத் தொல்காப்பிய உரை களில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ள உரையாசிரியர்கள் நூற் பெயரைக் குறிப்பிடவில்லை. தொல்காப்பியம் - புறத் திணையியலில், கூதிர்வேனில் என்னும் நூற்பாவின் இடையே யுள்ள எட்டு வகை நுதலிய அவையகத்தானும் என்னும் பகுதிக்கு விளக்கம் கூறியுள்ள இளம்பூரணர், குடிப்பிறப் புடுத்து என்னும் ஆசிரிய மாலைப் பாடலை மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ளார். அந்த உரை விளக்கமும் பாடலும் வருமாறு: எட்டு வகை துதலிய அவையகமும்=எட்டுப் பாகுபாட் டைக் குறித்த அவையகமும். எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இவ்வவை மிகுதி உடைத் தென்றவாறு. அவையா