பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரிய மாலை - 387 வன:-குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை என்பன. அவை எட்டினானும் அவை வருமாறு: 'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காதல் இன்பத்துள் தங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாஅ இன்மையென இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடனமர் இருக்கை ஒருநாள் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன் முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து கின்றுழி கின்றுழி ஞாங்கர் கில்லாது கிலையழி யாக்கை வாய்ப்பஇம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே."இளம்பூரணர் உரைப் பகுதி இது. பாடல் முழுவதையும் தந்தவர் நூற்பெயரைக் குறிப்பிடவில்லை. பெரும்பாலும் நூற்பெயர்களுடன் பாடல்களைத் தரும் நச்சினார்க்கினியரும் நூற்பெயரின்றி இப்பாடலைத் தந்துள்ளார். இதே தொல் காப்பியப் பகுதிக்கு அவர் வரைந்துள்ள உரைப்பகுதி வரு மாறு: “எட்டுவகை துதலிய அவையத்தானும்=எண் வகைக்குணத் திணைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும். அவை குடிப்பிறப்புக் கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவுநிலைமை அழுக்காறின்மை அவாவின்மை எனவிவையுடை யராய் அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல்: ' 'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே' என இதனுள் எட்டும் வந்தன: