பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/415

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிரு பாட்டியல் 391 ளார். தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும் யாப்பிலக்கண நூல்கள் பல தோன்றியுள்ளன. பாட்டியல்' என்னும் பெயரில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் பலவாகும், அவற்றுள் பன்னிரு பாட்டியல்' என்பதும் ஒன்று. - பாட்டியல் என்னும் நூற்பெயர் வழக்காறு மிகவும் பிற் காலத்த தாகும். சங்க காலத்தில் 'பாட்டியல்' என்னும் பெயரில் யாப்பிலக்கண நூல் இருந்ததாகத் தெரியவில்லை. பன்னிரு பாட்டியல் என்னும் நூலின் ஆசிரியர் பெயரோ காலம்ோ வேறு வரலாறோ ஒன்றும் தெரியவில்லை. இந்த நூலில் எழுத்தியல், சொல்லியல், இனவியல் என மூன்று இயல்கள் உள்ளன. எழுத்தியல், சொல்லியல் ஆகிய இரண்டிலும் சிறப்பாக பன்னிரண்டு பொருள்கள் கூறப்பட்டுள் ளன. அதனால் இந்நூலுக்குப் பன்னிரு பாட்டியல் என்னும் பெயர் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப் பன் னிரண்டும் வருமாறு:- - - எழுத்தியல்: 1. எழுத்துக்களின் பிறப்பு; 2. வருணப் பொருத்தம், 3. கதிப் பொருத்தம்; 4. உண்டிப் பொருத்தம்; ;. பால் பொருத்தம்; 6. தானப் பொருத்தம்; 1. கன்னல் பொருத்தம்; 8. புள் பொருத்தம்; 9. நாள் பொருத்தம்; சொல்லியலில் 10 சீர்க்கணப் பொருத்தம்; 11. மங்கலப் பொருத்தம்; 12. பெயர்ப் பொருத்தம். இந்தப் பன்னிரு செய்திகள் கூறப்பட்டிருப்பதால் பன்னிரு பாட்டியல் எனப் பெயர் வழங்கப்பட்டதாம். மூன்றாவதான இனவியலில் பல்வேறு இன நூல்களுக்கு உரிய இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஐம்பத்தொன்பது வகை நூல் கட்கு இலக்கணம் கூறியுள்ளனர். இஃது ஒருபுறம் இருக்க,-பன்னிருவர் இயற்றிய தொகுப்பு நூலாகிய பன்னிரு படலம் என்பதைப் போலவே, பன்னிரு பாட்டியலிலும் பன்னிருவர் இயற்றிய நூற்பாக்களின் தொகுப்பு நூலாகும் என்று ஒருசாரார் கூறுகின்றனர். இதனை மற்றொரு சாரார் மறுக்கின்றனர். பன்னிரு பாட்டியலுக்கு உரையெழுதியுள்ள திரு.கா.ர. கோவிந்தராச முதலியார் பன்னிரு பாட்டியலுக்கு உரியனவாக