பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 தமிழ் நூல் தொகுப்புக் கலை 232 நூற்பாக்களைத் தந்துள்ளார். இந்நூற்பாக்களை இயற்றிய நூலாசிரியர் பெயர் அறிவிக்கப்படவில்லை. மேலும் அவர் இந்த 232 நூற்பாக்களுக்கு உரிய மேற்கோள் நூற்பாக்களாக 137 நூற்பாக்களைத் தந்துள்ளார். இந்த 137 நூற்பாக்களுள் 103 நூற்பாக்களுக்கு ஆசிரியர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; மற்ற 34 நூற்பாக்களுக்கு உரிய ஆசிரியர் பெயர்கள் தெரியவில்லை. கோவிந்தராச முதலியாரின் பதிப்பில், 103 மேற்கோள் நூற்பாக்களுக்கு உரிய ஆசிரியர்களாகப் பதின் மூவர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்தம் பெயர்களும் அவர்கள் இயற்றியுள்ள நூற்பாக்களின் எண்ணிக்கையும் முறையே வருமாறு: 1. பொய்கையார் - 14 8. சேந்தம் பூதனார் — 5 2. பரணர் - 12 9. கோவூர் கிழார் — 4 3. இந்திரகாளியார் - 34 10. மாபூதனார் — 3 4. அவிநயனார் - 9 11. சீத்தலையார் — 2 5. அகத்தியர் 12. பல்காயனார் — 1 (பாட்டியல்) - - 6. கல்லாடனார் - 13 13. பெருங்குன்றுர் 7. கபிலர் — 3 - 2 நூலுக்கு உரியனவாகச் சொல்லப்படும் 232 நூற்பாக்களின் இடையிடையே மேற்கோள் நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் ஒருவர், பெயர் தெரிந்த மேற்கோள் நூற்பாக் களின் ஆசிரியர்கள் பதின்மூவர், பெயர் தெரியாத 34 மேற் கோள் நூற்பாக்களின் ஆசிரியர்கள் ஆகிய அனைவரையும் கூட்டிக் கணக்கிடின், பன்னிரு பாட்டியலில் உள்ள மொத்த நூற்பாக்களின் ஆசிரியர்களின் எண்ணிக்கை பன்னிரண்டுக்கு மேல் போகிறது. எனவே, பன்னிருவர் இயற்றிய நூற்பாக் களின் தொகுப்பு ஆதலின் இந்நூல் பன்னிரு பாட்டியல் என் னும் பெயர் பெற்றது என்று கூறும் பெயர்க் காரணம் பொருந்தாது என்பது சிலர் கொள்கை. பன்னிருவர் இயற்றிய நூல்தான் பன்னிரு பாட்டியல் என்று வலியுறுத்திக் கூறுபவர்கள், மேலே காட்டிய ஆசிரியர்