பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/417

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பன்னிரு பாட்டியல் 393 .களுள் சிலர் பெயர்கள் இடையிலே புகுத்தப்பட்டன என்று கூறுவா, கோவிந்தராச முதலியாரின் பதிப்பில் நூலுக்கு உரியன வாகக் கருதப்படும் 232 நூற்பாக்களுக்கும் தனி எண்வரிசை யும், மேற்கோள்களாகக் கருதப்படும் 137 நூற்பாக்களுக்கும் தனி.எண் வரிசையும் வெவ்வேறாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், திரு.ரா. இராகவையங்காரால் செந்தமிழின் பன்னி ரண்டாம் வெளியீடாக 1904-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பன்னிரு பாட்டியல் பதிப்பில், நூலுக்கு உரிய நூற்பாக்களுக் கும் மேற்கோள் நூற்பாக்களுக்கும் தனித்தனியாக எண்வரிசை கொடுக்கப்படாமல், எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே எண் வரிசை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிப்பில் பாயிரம் ஒன்று உட்பட மொத்தம் 360 நூற்பாக்கள் எண் வரிசை தரப் பட்டுள்ளன. கோவிந்தராச முதலியார் பதிப்பில் பதின்மூவர் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இராகவையங்கார் பதிப்பில், இப் பதின் மூவருடன் செயிற்றியனார், நற்றத்தனார் என்னும் இருவர் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். நற்றத்தனார் நூற்பா ஒன்றும், செயிற்றியனார் நூற்பா மூன்றும் இதில் உள்ளன. ஆக இப்பதிப்பில் பதினைவர் பெயர்கள் இடம் பெற் றுள்ளன. இந்தப் பதிப்பின்படி நோக்கினும், பன்னிருவர் நூற் பாக்களின் தொகுப்பு பன்னிரு பாட்டியலாகும் என்னும் கொள்கை பொருந்தாது போகிறது. பன்னிரு பாட்டியலிலுள்ள நூற்பாக்களின் ஆசிரியர் பெயர்களைப் பார்க்குங்கால், பெரும்பாலானவை சங்கப் புலவர்களின் பெயர்களாக உள்ளன; எனவே, சங்கப் புலவர்கள் பலர் யாப்பிலக்கண நூல்களும் இயற்றியிருந்தனர்; அவற்றினின்று சிற்சில நூற்பாக்களை எடுத்துத் தொகுத்துப் பன்னிரு பாட்டியலைப் பின்வந்த ஒருவர் உருவாக்கினார்எனச் சிலர் கருதுகின்றனர். இதற்குச் சான்று பகர்வதுபோல் இலக்கண விளக்கப் பாட்டியலுரை அமைந்துள்ளது. இலக்கண விளக்கப் பாட்டியல் உரையில் மாமூலரின் சில நூற்பாக்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. ஆனால், இவருடைய நூற் பாக்கள் பன்னிரு பாட்டியலில் இல்லை. மற்றும், பன்னிரு