பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 தமிழ்நூல் தொகுப்புக் கலை பாட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திர காளியார் என்பவரின் நூற்பாக்கள் சிலவும் இலக்கண விளக்கப் பாட்டியல் உரையில் காட்டப் பெற்றுள்ளன; இந்நூற்பாக்கள் பன்னிரு பாட்டியலில் இல்லை. எனவே, பாட்டியல் என்னும் பெயரில் இல்லாமல், வெவ்வேறு பெயர்களில் பண்டைப் புலவர்கள் யாப்பிலக்கண நூல்களும் இயற்றியிருந்தனர்; அவற்றுள், சிலர் நூல்களிலிருந்து சிலநூற்பாக்களை எடுத்துத் தொகுத்துப் பன்னிரு பாட்டியல் என்னும் ஒரு தொகைநூலைப் பிற்காலத்தில் உருவாக்கினர்' என்பது சிலர் கருத்து. - - இந்தக் கருத்தை மறுப்பவர் கூற்று வருமாறு: "பன்னிரு பாட்டியலில் சொல்லப்பட்டுள்ள பல செய்திகள் வடநூற் சார்பானவை; பிற்காலத்தில் தமிழுக்கு வந்தவை; எனவே, இந்தச் செய்திகளைச் சங்கப் புலவர்கள் எழுதித் தெரிவிக்கமாட்டார்கள்; பிற்காலத்தார் எவரோ இந் நூற்பாக்களை இயற்றி, இவற்றிற்குப் பெருமை யுண்டாவ தற்காக, இவற்றைச் சங்கப் புலவர்கள் தலையில் கட்டி விட்டனர். மற்றும், பாட்டியல் என்னும் பெயரில் யாப்பிலக் கண நூல்கள் சங்க காலத்தில் இயற்றப்படவில்லை- இவ் வாறாகப் பல பல கூறி மறுக்கின்றனர். மேலுள்ள கருத்தை மறுப்பவர் கூற்றாவது:- "வட நூற் சார்பான கருத்துக்கள் சங்க காதத்திலேயே தமிழ் நூல்களில் புகுந்து விட்டன. எனவே, எல்லா நூற்பாப் களையும் பிற்காலத்தன எனத் தள்ளுவதற்கில்லை. சங்க காலத்தில் பாட்டியல் என்னும் பெயரால் இந் நூல் தொகுக் கப்பட்டிருக்கவில்லையாயினும், பிற்காலத்தில் இந்தத் தொகுப்பு நாலுக்குப் பாட்டியல் என்னும் பெயர் கொடுக்கப் பட்டிருக்கலாம். எனவே, சங்கப்புலவர்கள் சிலர் யாப்பிலக்கண நூல்கள் இயற்றிய உண்மையை மறைப்பதற்கில்லை' - என் பது இவர்தம் கருத்து. பொதுவாக நோக்குமிடத்து, - பன்னிரு பாட்டியலி லுள்ள நூற்பாக்கள் ஒரேகாலத்தில் இயற்றப்பட்டனவல்ல; பல காலத்தில் வாழ்ந்த பலர் இயற்றிய நூற்பாக்களின் தொகுப்பேயாகும் - என்பது போதரும். இந்நூலில், கீழ்க்