பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/425

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 403 கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித் தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்” என்பது பாடல். இவ்வளவு பெருமைக்கு உரிய மூவர் தமிழைத் திட்டமிட்டு அறைக்குள் போட்டுச் செல் அரிக்கச் செய்ததும், மூவர் வந்தால்தான் கதவைத் திறக்க முடியும் என அடம் பிடித்ததும் கொடுமை என ஒரு சாராரைச் சிலர் துாற்றலாம். ஆனால், மூவர் தமிழை அடியோடு எரித்து விடாமல், அறைக் குள் வைத்துக் காத்து வந்தார்களே.என அன்னாரைப் போற் றுதலே ஒரு வகையில் பொருந்தும். தேவாரம் மூவர் தமிழாகிய முதல் ஏழு திருமுறைப் பாடல்களும் தேவாரம்' என்று பெயர் வழங்கப்படுகின்றன. இப்பெயர் பாடல் ஆசிரியர்களால் தரப்பட்ட தன்று; பிற்காலத்தாரா லேயே தரப்பட்டதாகும். இதன் பொருள் என்ன? தே+ஆரம் எனப் பிரித்து, தெய்வமாலை - அதாவது - தெய்வத்திற்குச் சாத்தும் பாமாலை என்று இதற்குப் பொருள் செய்வர் சிலர்: தே-வாரம் எனப் பிரித்து, தெய்வஅன்பு-அதாவது.தெய்வத் தின்பால் செலுத்தும் அன்பு எனவும் சிலர் கூறுவர். - தேவாரம், திருஞான சம்பந்தர் தேவாரம், அப்பர் என் னும் திருநாவுக்கரசர் தேவாரம், சுந்தரர் தேவாரம் என மூவகையாக ஆசிரியர் பெயரால் குறிப்பிடப்படுகிறது. ஒவ் வொருவர் பாடிய தேவாரப்பாக்கள் அவரவர் பெயரால் தனித்தனியாகக் குறிப்பிடப்படும்போது, அவ்வத் தொகை யைத் தனி மலர் மாலை என்னும் வகைக்குள் அடக்கலாம். தேவாரப் பெயர் ஆட்சி தேவாரம் என்னும் பெயர் முதலில் பரக்களைக் குறிக்க வில்லை. கடவுள் தொடர்புடையது - கடவுள் வழிபாட்டுத் தொடர்புடையது - கடவுள் திருமேனி (விக்கிரகம்) தொடர் பானது - வழிபாட்டு இடத் தொடர்புடையது - என்னும் பொரு எளில் சில நூல்களிலும் சில கல்வெட்டுகளிலும் தேவாரம் என்னும் பெயர் ஆட்சி காணப்படுகின்றது. உமாபதி சிவம்