பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 தமிழ்நூல் தொகுப்புக் கலை என்பவர் இயற்றிய கோயில் புராணம் - திருவிழாச் சருக்கம் என்னும் பகுதியில், - “உயர்தர மூவாயிரவர் கடாவா மறையொடு தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற ...” (27) என்றும், ஈடு முப்பத் தாறாயிரப்படி என்னும் வைணவ விரி வுரை நூலில், உம்முடைய தேவாரமோ (6-8-10) என்றும் இப் பெயராட்சி உள்ளது. - மற்றும், தென்னிந்தியக் கல்வெட்டு ஒன்றில் (7 - 269), 'பெரியவுடையார் தேவாரத்தில் கேட்டருளி' என்றும், மற் றொரு கல்வெட்டில் (2-155) "பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எழுந்தருளிவித்த தேவர்' என்றும், முனி யூர்க் கல்வெட்டில் (8-205) 'திரு முறைத் தேவாரச் செல்வன்' என்றும், திருக்களார் கல்வெட்டில் (8-260) “நம் தேவாரத் திற்குத் திருப்பதிகம் பாடும் பெரியான்' என்றும் தேவாரப் பெயர் ஆட்சி காணப்படுகிறது. பண்டு அரசர், அருளாளர் முதலியோர் வெளியூர்க்குச் செல்லும் போது, உடன்எடுத்துச் செல்லும் சிறுசிறு கடவுள் உருவம் வைக்கப்பட்ட பெட்டி ‘தேவாரப் பெட்டி எனப்பட் டது. மற்றும், கடவுள் வழிபாடாகிய தேவாரத்தின்போது (தேவாரம்-கடவுள் வழிபாடு), ஒதப்பட்ட பாடல்கள் நாள டைவில் தேவாரப் பாடல்கள் என்னும் திருப்பெயர் வழங்கப் பட்டன. இந்த அடிப்படையில், பின்னர், மூவர் தமிழ்ப்பாடல் கள் தேவாரம் என்று குறிப்பிடப்பட்டன. பின்பு தேவாரம், சம்பந்தர் தேவாரம், திருநாவுக்கரசர் தேவாரம், சுந்தரர் தேவாரம் என மூவகையாக ஆசிரியர் பெயரால் குறிப்பிடப் படுகிறது. ஒவ்வொருவர் பாடிய தேவாரப் பாக்களை அவரவர்பெயரால் தனித்தனியாகக் குறிப்பிடும் போது, அத் தொகையைத் தனி மலர் மாலை' என்னும் வகைக்குள் அடக்கலாம். தேவாரத்தின் வேறு பெயர்கள் தேவாரம் என்ற பெயர் பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே மூவர் தமிழுக்கு வழங்கப்படத் தொடங்கியது. சேக் கிழார், திருப்பதிகம், தமிழ்த் தொடை, உரைமாலை முதலிய