பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/428

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


406 தமிழ்நூல் தொகுப்புக் கலை படுத்தியும் தத்தம் சமயம் வளர்த்தனர். தேவார ஆசிரியர் களோ, அந்த மொழிகளில் மதம் மாறிய மக்கட்கு இருந்த 'மாயையை அகற்றத் தெய்வத் தமிழைக் கையாண்டனர். தமிழ் மணம் எங்கும் வீசச் செய்தனர். தேவர ஆசிரியர்களும் ஆழ்வார்களும் தமிழ் - தமிழ் - தமிழ் என்று மூச்சைப் பிடித் துக் கொண்டு அடித்துக் கொண்டதில் உள்ள மறைபொருள் (இரகசியம்) இதுவே. சமசுகிருதம் - ஆங்கிலம் முதலிய மொழி களின் மேலாட்சி ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்ப் புலவர்கள் தம் முன்னோரின் முறையையே பின்பற்றித் தமிழ் வளர்த்த னர். இதற்கு வழிகாட்டிகளாய் இருந்தவர்கள் தேவாரதிவ்வி யப் பிரபந்த ஆசிரியர்களேயாவர்.இந்த அடிப்படை நோக்கத் தில்தான், தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்னும் தொகைப் பெயர் பெற்றன. இந்தப் பாடல்களை வெளிவரச் செய்து திருமுறைகண்ட சோழன்’ என்னும் பட்டப் பெயரை இராசராச சோழன் தட்டிக் கொண்டான். பிற்கால மன்னர்கட்கு இத்தகைய தமிழ் உணர்வு இல்லாமற் போனது வருந்தத்தக்கது. இனி மூவர் தேவாரங்களையும் அவரவர் பெயரால் தனித்தனியாக நோக்குவாம். - - திருஞான சம்பந்தர் தேவாரம் திரு ஞான சம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்கள் பாடிய தாகத் திருமுறை கண்ட புராணம் சொல்கிறது. ஒரு பதிகம் என்பது பத்துப்பாடல் கொண்டது. ஆனால், சம்பந்தர் தேவா ரத்தில் ஒவ்வொரு பதிகத்திலும் பதினொருபாடல்கள் உள்ளன முதல் பதிகம் தோடுடைய செவியன்'என்று தொடங்கும் பதிகம் என்றும், இறுதிப் பதிகம் கல்லூர்ப் பெருமணம்' என்று தொடங்கும் பதிகம் என்றும் அப்புராணம் கூறுகிறது. "தோடுடைய செவியன் முதல் கல்லூர் என்னும் தொடை முடிவாப் பரசமயத் தொகைகள் மாளப் பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம் பதினா றாயிரம் உளதாப் பகரு மன்றே' (14)