பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ் நூல் தொகுப்புக் கலை வும் கேட்கலாம் அஃதாவது,-உதிரிப் பாடல்கள் முதலில் தோன்றினவா? முழுத் தனிபாடல்கள் முதலில் தோன்றினவா? இந்த வினாவுக்கு விடையிறுப்பது எளிது. தொகை நூற் பாடல்களே-அதாவது - உதிரிப் பாடல்களே முதலில் தோன் றியவையாகும். பின்னரே முழுத் தனி நூல்கள் தோன்றின தொகை நூல்களிலேயே இருவகை உண்டு. அவையாவன:'புறநானூறு' என்னும் நூலைப் போல, பாவலர்கள் ப்லர் பாடிய பாடல்களின் தொகுப்பு ஒருவகை. சுப்பிரமணிய பாரதியார் என்பவர் பல சமயம் பாடிய பல்வேறு வகைப் பாடல்களின் தொகுப்பாகிய 'பாரதியார் பாடல்கள் (பாரதியார் கவிதைகள்) என்னும் நூலைப்போல, ஒருவரே பல நேரத்தில் பல பொருள்கள் பற்றிப் பாடிய பல்வேறு வகைப் பாடல்களின் தொகுப்பு நூல் மற்றொரு வகையாகும். இவ்விருவகைத் தொகை நூற்களுள், பலர் பாடல்களின் தொகுப்பு நூலே முதலில் தோன்றியிருக்க முடியும். ஒருவர் பாடல்களின் தொகுப்பு நூல் பின்னரே தோன்றியிருக்க வேண்டும். இயற்கை வழி இதனைத் தீர்மானிப்போம்: மிகவும் பழைய காலத்தில், ஒருவரே பல பாடல்கள் இயற்றுவது என்பது அருமை. அவரவரும் ஏதேதோ ஒன்றி ரண்டு அல்லது இன்னும் சிறிது கூடுதலாகப் பாடல் இயற்று வதே இயற்கை. இப்படியாகப் பலர் பாடிய பல பாடல்களை யும் மக்கள் கேட்டும் பாடியும் சுவைத்து மகிழ்ந்திருப்பர்; பின்னர் அவற்றைத் தொகுத்து எழுதியும் வைத்துக்கொண்டி ருப்பர். இதற்கு அடுத்த கட்டமாகவே, ஒருவர் பல பாடல்கள் எழுதுவது நிகழ்ந்திருக்கும். அந்த ஒருவரும் முதலில் ஒரு பொருள் பற்றித் தொடர்ந்து ஒரு முழுத் தனிநூல் எழுதி யிருக்க முடியாது ; அவர் அவ்வப்போது பல பொருள் பற்றித் தனித்தனிப் பாடல்களே எழுதியிருக்கக் கூடும்; இந்தத் துறை யில் திறமை பெருகப் பெருக, பின்னரே ஒரு பொருள் பற்றித் தொடர்ந்து ஒரு முழுத் தனி நூல் எழுதியிருக்க முடியும்: இன்றுள்ள பாவலர் ஒருவரையே எடுத்துக் கொள்வோம்: - அவர் முதலில் பலர் எழுதிய பாடல்களை - பல இலக்கியங் களைப் படித்துப் பயிற்சி பெறுகிறார். பின்னர், அவ்வப்போது