பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 409 டாவது அடியாகவும்-மூன்றாவது அடியாகவும் - நான்காவது அடியாகவும் உள்ளன. வந்ததே திரும்பத் திரும்ப வருவதற்கு யமகம் என்பது பெயராம். மாதிரிக்காக முதல் பாடலை மட்டும் காண்பாம்: - 'பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான்: பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான்' இது தொகுப்பு பற்றிய நூலாதலின் மேலும் விரிப்பு வேண்டியதில்லை. - இவர் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தவராதலின், இவரது காலம் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் மூன்றாம் அகவையிலேயே பாடினார் என்பதும், தாம் வாழ்ந்த பதினாறாண்டு காலத்தில் இவ்வளவு பாடல்கள் பாடினார் என்பதும் வியப்பிற்கு உரிய செய்திகளாகும். இவர் நல்லூர்ப் பெருமணக் கோயிலில், திருமணக் குழு வோடு சோதியில் கலந்தார் என்பது சிலருடைய ஐயத்திற்கு இடமான செய்தியாகும். மதுரையில் சம்பந்தர் தங்கியிருந்த மடம் சமணரால் கொளுத்தப்பட்டது. இவர் மதுரையில் எண் ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றச் செய்து வந்தார். இந்த நிலையில், சமணர்கள், நல்லூர்ப் பெருமணக் கோயிலில் தீக்கொளுத்தி, அனைவரையும் கூண்டோடு கயிலாயம் போகச் செய்தார்கள் என்பது சிலரது கருத்து. இந்தக் கால அரசியல் கட்சிகளைப் போல் அந்தக் காலத்தில் மதவாதிகள் செயல் பட்டனர் என்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து அறிஞர்களின் ஆய்வுக்கு உரியது. உலகியலில் ஒரு செய்தியை எழுதி, இறுதியில் முத்திரை யுடன் எழுதியவரின் பெயர் கையொப்பமாக இடப்படுவது போல, சம்பந்தர் தம் பதிகங்களின் இறுதியில் தம்மைப் பற்றிக் கூறுவதால், இவரை முத்திரைக் கவிஞர்' என்று குறிப் பிடுவதுண்டு.