பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/433

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 411 ஆனால் வேறு நூலில் நாவுக்கரசரின் பாடல் எண்ணிக்கை வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது; சுந்தரர் தம் பாடல் ஒன் றில், 'ஏழெழு நூறு இரும்பனுவல் ஈந்தவன் திருநாவினுக்கு அரையன்' (தென் திருநின்றியூர்ப் பதிகம் - 2) என்று கூறி யுள்ளார். நம்பியாண்டார் நம்பி, தமது திருவேகாதசமாலை” என்னும் நூலில் 'பதிகம் ஏழெழுநூறு பகரும் மாகவியோகி பரசு நாவரசரான பரம காரண வீசன் (7) என்று பாடியுள் ளார். நாவரையர் பாடியவை 4900 பாடல்கள் என்பதாகச் சுந்தரர் பாடலாலும், 49,000 பாடல்கள் என்பதாக நம்பி யாண்டார் நம்பி பாடலாலும் அறியப்படுகின்றன. போனவை போக, நின்றன வரையும் ஆக்கமே. நான்காம் திருமுறையில் முதல் 21 பதிகங்கள், கொல்லி - காந்தாரம் - பியந்தைக் காந்தாரம் - சாதாரி - காந்தார பஞ்சமம் - பழந்தக்க ராகம் - பழம் பஞ்சுரம் - இந்தளம் - சீகாமரம் - குறிஞ்சி என்னும் பண்களைக் கொண்டுள்ளன. 22 முதல் 79 வரையுள்ள பதிகங்கள் திரு நேரிசை என்ற யாப்பு தொடர்பான பெயருடன் கொல்லி என்னும் பண்ணைக் கொண்டுள்ளன. இவை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்களால் ஆனவை. 80 முதல் 119 வரையுள்ள பதிகங்கள், 'திருவிருத்தம் என்னும் யாப்பு தொடர்பான பெயருடன், கட்டளைக் கலித்துறைப் பாக்களால் ஆனவை. பண் முறையும் யாப்பு முறையும் பின்பற்றப்பட்டுள்ளன. ஐந்தாம் திருமுறை திருக் குறுந்தொகை' என்னும் பெய ருடன் தொகுக்கப்பட்டுள்ளது; பண் குறிப்பிடப்படவில்லை; கலி விருத்தப் பாக்களால் ஆனது இத்திருமுறை. ஆறாம் திருமுறை, திருத் தாண்டகம் என்னும் யாப்பு வகைப் பெயருடன், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத் தால் ஆனது. இத் திருமுறை திருத் தாண்டகம்' என்னும் பெயர் கொண்டுள்ளதால், 'தாண்டக வேந்தன்' என்னும் பெயர் திருநாவுக்கரசருக்கு வழங்கப் பெறுகிறது. இவர் நூற்றிருபத்தாறு திருப்பதிகள்மேல் பதிகம் பாடி யிருக்கிறார். பல திருப்பதிகட்குத் தனித் தனிப் பதிகம்