பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/434

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


412 தமிழ்நூல் தொகுப்புக் கலை பாடாமல், சில பாடல்களுக்குள்ளேயே, அத்திருப்பதிகளைத் தொகுத்துக் குறிப்பிட்டுள்ளார். இத்தகையவற்றை அடைவுப் பதிகள்’ என்றும் வைப்புப் பதிகள்’ என்றும் கூறுவர். சுவையான அமைப்புகள்: நாவுக்கரசர் நான்காம் திருமுறையில் - ஐந்தாம் பதிகத் தில் ஒவ்வொரு பாவின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துப் பாடியுள்ளார். முறையே அப்பழமொழிகள் வரு மாறு: 'கணியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே - 'முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே. 'அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே. 'பணி நீரால் பரவை செயப் பாவித்தேனே'. 'ஏதன்போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே'. 'இருட்டறையில் மலடு கறந்து எய்த்த வாறே. ‘விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்த வாறே. ‘பாழுரில் பயிக்கம் புக்கு எய்த்த வாறே'. ‘தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே. . கரும்பிருக்க இரும்புகடித்து எய்த்த வாறே. 1 0 இந்த அமைப்பு மிகவும் சுவையாயுள்ளதன்றோ? ஏழாம் பதிகத்தில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் என் மனத்தே வைத்தேனே' என்னும் தொடரை அமைத்துள்ளார். இது திரு அங்க மாலை எனப்படும். பதினொன்றாம் திருமுறையில் பாடல்களின் இறுதியில் நவச்சிவாயவே என்பதை அமைத் துள்ளார். இது நமச்சிவாயப் பதிகம் எனப்படும். எண் விளையாட்டு: நான்காம் திருமுறை - பதினெட்டாம் பதிகத்திலும், ஐந் தாம் திருமுறை எண்பத்தொன்பதாம் பதிகத்திலும், ஒன்று முதல் பத்து எண்களை அமைத்து விளையாடியுள்ளார் - அதா வது முதல் பாட்டின் நான்கு அடிகளிலும் தொடக்கத்தில் 'ஒன்று கொலாம்' என்பது இருக்கும். இப்படியே ஒவ்வோர் எண் கொண்ட பாடலின் நான்கு அடிகளிலும் தொடக்கத்தில் அவ்வப் பாடலின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். முறையே,