பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 413 பத்தாவது பாடலின் நான்கு அடிகளிலும் தொடக்கத்தில் 'பத்துக் கொலாம் என்றிருக்கும். இது, நான்காம் திருமுறைபதினெட்டாம் பதிகத்தின் அமைப்பாகும். ஐந்தாம் திருமுறைஎண்பத் தொன்பதாம் பதிகத்தில், ஒன்று - ஒன்று ஒன்று - ஒன்று எனவும், பத்து பத்து - பத்து பத்து எனவும் அமைக் கப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, நான்காம் திருமுறை - பதினெட்டாம் பதிகத்தின் மூன்றாம் பாடலைக்காண்பாம். 'மூன்று கொலாம் அவர் கண்ணுத லாவன மூன்று கொலாம் அவர் சூலத்தின் மொய்யிலை மூன்று கொலாம் கணை கையது வில் நாண் மூன்று கொலாம் புரம் எய்தன தாமே". பொருள்: - முதலடி சிவனுக்கு நெற்றிக்கண் உட்பட மூன்று கண்கள் உள. அடி2. சிவனது சூலப் படையின் நுனியில் மூன்று இலைகள் - மூன்று கூர்கள் இருக்கும் (திரி சூலம்). அடி 3: சிவன் முப்புரங்களை எரிக்கச் சென்ற போது, கையில், மேரு மலையாகிய வில் வாசுகிப் பாம்பாகிய நாண் - திருமாலாகிய அம்பு என்னும் மூன்றும் வைத்திருந்தார். அடி 4: சிவன் எரித் தவை மூன்று புரங்கள். அகர வரிசை அமைப்பு: நாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை - தொண்ணுாற்றேழாம் பதிகத்தில், ஒளவையாரின் ஆத்திசூடி - கொன்றை வேந்தன் போல், பாடல்களை அ, ஆ - என்னும் அகர வரிசையில் தொடங்கியுள்ளார். இந்தப் பதிகத்தில் மட்டும் முப்பது பாடல் கள் உள்ளன. ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகிய நூல்களுக்கும், இன்னும் பிற்காலத்தில் தோன்றிய பாரதி யார் ஆத்திசூடி முதலிய பலர் எழுதிய ஆத்திசூடிகட்கும் இந்தப் பதிகம் ஒரு முன்னோடியாக (Pioneer) உள்ளது. இனி முப்பது பாடல்களின் முதல் சொற்கள் முறையே வருமாறு: அண்டம், ஆதி, இட்ட, ஈறில், உச்சி, ஊரிலா, எந்தை, ஏன, ஐயன், ஒருவனாகி, ஒத, ஒளவதன், அக்கும் (ஃ), கங்கை(க), ங்கர (ங்), சரண(ச), ஞமனென்(ஞ), இடப (ட), இணர்ந்து(ண), தருமம்(த), நம(ந), பற்பல் (ப), மணி(ம), இயக்கர் (ய), அரவ(ர), இலங்கை (ல), அழல்(ழ), இளமை (ள),