பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக் காலம் 415 “இத்தன்மை நிகழ்ந்துழி காவின் மொழிக்கு இறையாகிய அன்பரும் இக்கெடுநாள் சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது. என்று தெருண்டறியா அத்தன்மைய னாய இராவணனுக்கு அருளும் - கருணைத் திறமான அதன் மெய்த்தன்மை அறிந்து துதிப்பது மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே" (1345) என்பது பாடல். நாவுக்கரசர் இறைவனுக்குத் தொண்டன் என்ற முறையில் (தாசமார்க்கம்) இயங்கி அதற்கேற்பப் பாடி யுள்ளார் - என்று சொல்லப்படுகிறார். மகேந்திரவர்மப் பல்ல வனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு இவர் மாற்றியவராத லின், அவன் காலமாகிய ஏழாம் நூற்றாண்டே நாவுக்கரசின் காலமுமாகும். - - சுந்தர மூர்த்தி தேவாரம் சுந்தர மூர்த்தி என்னும் சுந்தரர், பித்தா பிறை என்னும் பதிகம் முதல் ஊழி தோறும் என்பது வரை முப்பத்தெட்டா யிரம் பதிகங்கள் பாடியிருப்பதாகத் திருமுறை கண்ட புராணம் கூறுகிறது. "பித்தா என்னும், இன்ப முதல் திருப்பதிகம் ஊழி தோறும் ஈறாய் முப்பத் தெண்ணாயிரமதாக முன்பு புகன்றவர் கொடித்தான் மலையிற் சேர்ந்தார்' (16) என்பது பாடல் பகுதி. 'ஊழி தோறும் என்பது, ஒரு பதிகத்தைக் குறிக்கின்றதா - அல்லது - ஒரு பதிகத்தின் இறுதிப் பாடலைக் குறிக்கின்றதா? குழப்பமாயிருக்கின்றது. சென்னை - சைவ சித்தாந்த மகா சமாசத்தினர் வெளியிட்டுள்ள சுந்தரர் தேவாரப் பதிப்பில், 'ஊழிதோறுாழி என்று தொடங்கும் பாடல் எல்லாவற்றிற்கும் இறுதிப் பாடலாய் உள்ளது. தில்லைக் கோயில் அறைக்குள் செல்லரித்தவை போக எஞ்சிய பதிகங்கள் நூறு எனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது: