பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 417 தமிழ்வெறி இந்தக் காலத்தில் தமிழைப் பற்றிப் பேசினால் தமிழ் வெறி' என்று கூறுவர். தேவார ஆசிரியர்கள் தமிழ் வெறியர் களாகவே - தமிழ்ப் பித்தர்களாகவே இயங்கியுள்ளனர். தம் பாடல்களைத் தமிழ்-தமிழ் என்கின்றனர். சுந்தரர் தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வ தல்லாமல், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” எனவும், 'நல்லிசை ஞான சம்பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை” என மற்ற இருவரையும் தமிழ்ப் பைத்தியங்களாகக் கூறியுள்ளார். இந்த அமைப்பை நோக்குங்கால், மூவரும், கடவுளுக்காகத் தமிழ் பாடினர் என்று கூறுவதனினும், தமிழுக்காகக் கடவுளைப் பாடினர் என்று கூறலாம் போல் தோன்றுகின்றது என்று மதிப்புமிகு முருகபூபதி என்னும் நீதிபதி யவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. எனவே, மூவர் பாடல்கட்கு, மூவர் தமிழ் என நம் முன்னோர்கள் பெயர் கொடுத்திருப்பது மிகவும் பொருந்து மல்லவா? இதற்கு, மேலும் அகச் சான்றுகளாக, ஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களிலிருந்து சில பாடல் துணுக்குகளைப் பாடல் எண்ணுடன் பார்க்கலாம்: சிவ நெறிய தமிழ்-11, அருள் மாலைத் தமிழ்-33, நிகரில் லன தமிழ் மாலைகள்-129, நலங்கொள் தமிழ்-151, குன்றாத் தமிழ்-194, இயல்வல இசை மலி தமிழ்-238, சொல் ஆர் தமிழ் மாலை-337, பாமரு செந் தமிழ் மாலை - 469, தகை மலி தண் - தமிழ்-480, ஞால மிக்க தண் தமிழால்...கோல மிக்க மாலை -558, சீர் மிகுந்த தமிழ்-655, மறையிலங்கு தமிழ் - 666, வண் தமிழ்-677, உரை ஆர் தமிழ் மாலை - 914, ஆரா அருந் தமிழ் மாலை - 968, முடிவு இல் இன் தமிழ்-1024, பரவிய செந்தமிழ் -1184, பல மிகு தமிழ் - 1195, தவமல்கு தமிழ் - 1217. குற்ற மில் செந்தமிழ்-1227, சந்தம் இன் தமிழ்கள் - 1237, ஞானத் தமிழ் - 1270, கலிமலி தமிழ் - 1303, இசை செய்த படமலி தமிழ்-1314, எழில் மறை தன்னியல் கலைவல தமிழ்-1336, உருவாரும் ஒண் தமிழ் மாலை - 1622, குலமார் தமிழ்-1654, வடமார் தமிழ் - 1709, பலந்தரு தமிழ்க் கிளவி - 1807, செந் தண் தமிழ்-1861, பண்பொலி செந்தமிழ் மாலை-1992, செப்