பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூல் தொகுப்புக் கலை 19 பல்வேறு பொருள்கள் பற்றித் தனித்தனிப் பாடல்கள் எழுதிப் பழகுகிறார்: இந்தக் கலை கைவந்தபின்னர் முழுத் தனிநூல் எழுதுவதில் முனைந்து விடுகிறார். இதுதான் இயற்கை. இந்த நிலை அன்றைக்கும் பொருந்தும் - இனி என்றைக்கும் பொருந் தும். மற்றும், இந்த இயற்கை நியதி எந்த மொழிக்கும் பொருந்தும். சில மொழிகளில் கிடைத்திருக்கும் நூல்களுள், தொகை நூல்கள் பிற்பட்டனவாயும் முழுத் தனிநூல்கள். முற்பட்டன வாயும் உள்ளனவே யெனில், அம்மொழிகளில், உதிரிப்பாடல் கள் முன்னமேயே தொகுக்கப்படாமல் மறைந்து போயிருக்கக் கூடும்-அல்லது - தொகுத்த தொகை நூல்கள் மறைந்து போயி ருக்கலாம்-அல்லது - முழுத் தனியொரு நூலுக்கு முன்னால் தோன்றிய உதிரித் தனிப் பாடல்கள், அந்த முழுத் தனிநூல் தோன்றியபிறகு தொகுக்கப்பட்டுப் பிந்தியதுபோல் தோன்ற லாம். எனவே, எந்தக் கோணத்தில் நின்று நோக்கினும், தொகை நூற் பாடல்களே தொன்மைப் பெருமைக்கு உரியன என்னும் உண்மை ஒப்புக் கொள்ளப் பெறும். தொகுப்புப் பணியின் இன்றியமையாமை: பாவலர் பலர் பல காலத்தில் பல செய்திகள் பற்றிப் பாடிய நானூறு புறப்பொருள் பாடல்களின் தொகுப்பே 'புறநானூறு' என்னும் நூல் என்பது தெரிந்த செய்தி. இந்த நானூறு பாடல்களும் ஒரு நூலாகத் தொகுக்கப்படாதிருந் தால், அழியாமல் இப்போது நமக்குக் கிடைத்திருக்குமா? ஒரு நூலாகத் தொகுக்கப்படாமல் தனித்தனியாகக் கிடைப்பினும், இப்போது உள்ள அளவுக்கு அந்தத் தனிப்பாடல்கட்கு மதிப்பு இருக்கமுடியுமா? தனி மரம் தோப்பாகாது; தனிப்பாடல் சிறக்க முடியாது. தனி மாந்தருக்கு மதிப்புக் குறைவே. தனி யொருவரினும், பலர் சேர்ந்த ஒரு குழுவிற்கே-ஒரு சங்கத் திற்கே-ஒரு கழகத்திற்கே மதிப்பு மிகுதி. அதனாலேயே, பலர் சேர்ந்து கழகம் அமைத்து, அதன் வாயிலாகச் செயல்படுகின் றனர். அதன் வாயிலாகத் தம் விருப்பங்களை எளிதில் நிறை வேற்றிக் கொள்கின்றனர். தனித்தனி மாந்தரின் எதிரே ஒரு கட்டுப்பாடு இன்றிப் பேசமுடியும். ஆனால், அதே தனித் தனி