பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/442

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


420 தமிழ் நூல் தொகுப்புக் கலை எடுத்துத் தொகுத்துத் தரும்ாறு சிவாலய முனிவர் பொதிய மலை போந்து தவங்கிடந்து வேண்டிக் கொள்ள, அகத்திய முனிவர் இருபத்தைந்து பதிகங்களைத் தேர்ந்தெடுத்துத் திரட்டித் தந்தாராம். இதற்கு அகத்தியர் தேவராத் திரட்டு' என்னும் பெயர் ஈயப்பட்டுள்ளது. இந்த அகத்தியர் எந்த அகத்தியரோ? இதன் தொடர்பாகக் கட்டப்பட்டுள்ள கதை வியப்பிற்கு உரியது. சம்பந்தர் தேவாரத்திலிருந்து பத்துப் பதிகங்களும், நாவுக் கரசர் தேவாரத்திலிருந்து எட்டுப் பதிகங்களும், சுந்தரர் தேவாரத்திலிருந்து ஏழு பதிகங்களும் ஆக இருபத்தைந்து பதி கங்கள் இதில் உள்ளன. இந்த இருபத்தைந்து பதிகங்களையும் நாடோறும் ஒதின், மூவர் தேவாரம் முழுமையும் ஒதிய பயன் கிட்டுமாம். இத்தொகுப்பின் காலம் தெரியவில்லை. இந்தத் தொகுப்புக்குப் பல பதிப்புகள் உள்ளன. அவை ஆண்டு வாரியாக வருமாறு: ஒவ்வொரு பதிப்பிற்கும் பதிப் பாசிரியர் பெயர், அச்சகம், ஆண்டு ஆகியவை முறையே தரப்படும்: 1. ஆறுமுக நாவலர் & சதாசிவப்பிள்ளை - வித்தியானு பாலன யந்திர சாலை, சென்னை - 1873. 2. சுந்தர சுவாமிகள், மனோன் மணி விலாச அச்சுக் கூடம் - 1874. 3. சுப்புராய ஞானியர் - திருமயிலை - சி. பாஸ்டர் அச் சியந்திர சாலை - சென்னை-1878. 4. ஆறுமுக நாவலர் - வித்தியானு பாலன யந்திர சாலை, சென்னை-மூன்றாம் பதிப்பு-1880. 5. முருகேச முதலியார்-கலா ரத்நாகர அச்சுக் கூடம்-1887. 6. அ. இராமசுவாமி - ஜூபிலி அச்சியந்திர சாலைசென்னை-1888. 7. எம். இ. வீரபாகுபிள்ளை - பொழிப்புரையுடன் - கோல் டன் அச்சகம், சென்னை-1955. இவ்வாறு இன்னும் எத்தனை உள்ளனவோ?