பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/443

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 421 2. தேவார அருள் மொழித் திரட்டு உமாபதி சிவாசாரியார், சைவ சித்தாந்தக் கருத்துகட்கு அடிப்படையாக உள்ளவையும், தமது 'திருவருள் பயன்' என் னும் நூலுக்கு ஏற்றவையாக உள்ளவையும் ஆகிய தொண்ணுாற் றொன்பது பாடல்களைத் தேவார அருள் மொழித் திரட்டு’ என்னும் பெயரில் தொகுத்துத் தந்துள்ளார். இந்தத் தொகுப் பின் காலம், அவரது காலமாகிய பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இதற்கு மா.வே. நெல்லையப்பப் பிள்ளை உாை எழுகியுள் ளார். வெளியீடு: சைவ சித்தாந்த மகாசமாசம். சென்னை - சாது அச்சுச் கூடம், சென்னை - பதிப்பு ஆண்டு:1933. 3. அற்புதத் தேவாரத் திரட்டு மூவரும் செய்த அற்புதங்கள் தொடர்ப்ான பதிகங்களின் தொகுப்பாகும் இது. ஞானசம்பர்கர் எலும்பைப் பெண்ணாக் கப் பாடிய பதிகம், மரு.கவில் பாம்பு கடித்தவனைப் பிழைக்க வைத்த பதிகம், அனல் வாதம் - புனல் வாதங்களை வென்ற பதிகங்கள், பண்டியனின் வெப்பு நோய் தீர்த்த திருநீற்றுப் பதிகம், நாவுக்கரசர் திங்களூரில் பாம்பு கடிக் த இளை ஞனைப் பிழைக்க வைத்த பதிகம், கல் மிதந்த பதிகம், மறைக் கதவினைத் திறந்த பதிகம், சுந்தரர் முதலையுண்ட சிறுவனை உயிருடன் வர வழைத்த பதிகம் - முதலிய அற்புதங்கள்ைச் செய்வதற்காகப் பாடப்பட்ட பதிகங்கள், அற்புத்த் தேவாரத் திரட்டு என்னும் பெயருடன் தொகுக்கப்பட்டுள்ளன. - பதிப்பு: பூவை, கலியாணசுந் தர முதலியார்-இந்து தியாலா ஜிகல் யந்திர சாலை, சென்னை-1890, இன்னும் தேவாரப் பாக்களின் சிறு சிறு தொகுப்புகள் பலரால் செய்யப்பெற்றுள் GTrör திருவாலங் காட்டுத் தேவாரப் பதிகங்கள் திருவாலங் காட்டுத் திருப்பதிமேல் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய 32 பதிகங்களின் தொகுப்பு இது. தொகுப்பு: சண்முகப் பிள்ளை - இலகடிமி விலாஸ் .1374 - זנ (ני, ז: 3 ג