பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 423 கம், கோளறு பதிகம், திரு நீல கண்டப் பதிகம் ஆகியவற் றின் தொகுப்பு - பாப்புலர் அச்சியந்திர சாலை, சென்னை - 1887. நெல்லை - குற்றாலப் பதிகங்கள் சம்பந்தரின் திருநெல்வேலிப் பதிகங்களும் திருக்குற்றாலப் பதிகங்களும் உள்ளன .சு.சுப்பிரமணியப்பிள்ளை சிந்தாமணி யந்திரசாலை, பாளையங்கோட்டை - 1888. தேவாரத் திரட்டு மூவரின் தேர்ந்தெடுத்த பதிகங்கள் சில - வே. நாராயண சாமி வாத்தியார் - சுந்தர விலாச அச்சுக்கூடம், புரசை, சென்னை - 1897. தேவாரத் திரட்டு தேவாரப் பதிகங்கள், திருவாசகம் முதலிய ஒன்பது திரு முறைகளிலிருந்து பாடல்கள் தொகுக்கப்பட்ட நூல் இது மார்கழித் திங்கள் வழிபாட்டுக்காகத் திருவாசகத்திலிருந்து திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி முதலியன சேர்க்கப் பட்டுள்ளன - சபாபதி நாவலர் & சண்முக முதலியார் - சித் தாந்த வித்தியானுபாலன அச்சியந்திர சாலை - சிதம்பரம் - 1897. வேண்டுகோள் பதிகங்கள் துன்பங்கள் பல வடிவங்களில் நேரும்போது இறைவனை வேண்டிக் கொள்ளும் முறையில் அமைந்துள்ள மூவர் தேவாரப் பதிகங்கள் சில இத்தொகுப்பில் உள்ளன. தொகுத்தவர் சித்தாந்த பண்டிதர் ப. இராமநாதபிள்ளை, கழக வெளியீடுஅப்பர் அச்சகம், சென்னை. இந்தத் தொகுதி நான்கு பகுதி களாக (புத்தகங்களாக) உள்ளன. முறையே ஒவ்வொன்றாகக் காண்பாம் : - முதல் பகுதி - ஆகஸ்ட் 1954. நோய்-துன்பம் போக வேண் டிக் கொள்ளும் பதிகங்கள்-வருமாறு. 1. அப்பர் அருளிய திரு அங்கமாலை (தலையே நீ வணங்காய்') 2. சம்பந்தரின் திருநீற்றுப் பதிகம் (மந்திர மாவது).