பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/447

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 425 நடை பெறும். இந்த ஏழுர்கள் மேல் மூவர் பாடியுள்ள தேவாரப் பதிகங்களின் தொகுப்பு இது. தொகுப்பு, ந.மு.கோவிந்தராய நாட்டார் (ந.மு. வேங்கடசாமி நாட் டாரின் தம்பி)-மகாலிங்கம் பதிப்பகம், தஞ்சை - 1954. இவ்வாறு இன்னும் பல தொகுப்புகள் உண்டு. தேவாரப் பாடல்கள் பல மாதிரிகளில் தொகுக்கப் பட்டுப் பயனளித்து வருகின்றன. இத்தனை தொகுப்புகள் உள்ளமை, தேவாரத் தின்பால் மக்களுக்கு உள்ள ஈடு பாட்டை அறிவிக்கிறது. ஊர்களைப் பற்றியோ, பண்களைப் பற்றியோ ஆராய்ச்சி செய்வோர்க்கு இத்தகைய பதிப்புகள் பேருதவி புரியும். தேவாரத்தின் பல கூறுகள் மூவர் தமிழாகிய தேவாரங்கள், அன்பு (பக்தி)நூல் - வழி பாட்டு நூல் - சமய நூல் - ஆன்மீக நூல் - இலக்கிய நூல்-நீதி நூல்-வரலாற்று நூல்-தரை (பூகோள) நூல்-மர இன (தாவர) நூல், உயிரின நூல், பயண நூல், இசை நூல் - மொழி நூல் முதலிய பன்முன்ைப் பயன்தரும் நூல்களாகச் சொல்லக்கூடிய பல கூறுகளும் (அம்சங்களும்) அமைந்தனவாகப் போற்றப்படும் சிறப்பு உடையனவாம். . . திருவாசகம் எட்டாம் திருமுறை . சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் திருவாசகம் எட்டாம் திருமுறையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் வாதவூரர் என்னும் மாணிக்க வாசகர். சம்பந்தர், அப்பர் என்னும் நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்னும் சைவ சமயக் குரவர் நால்வருள் மாணிக்க வாசகரும் ஒருவர். மற்ற மூவரினும் இவர் காலத்தால் பிற்பட்டவ ராதலின் நான்கா மவராகக் குறிப்பிடப்படுகிறார். - தென்னவன் பிரம ராயன் என்னும் பட்டப் பெயருடன் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராயிருந்த மாணிக்க வாசகர்’ அமைச்சர் பதவியைத் துறந்தபின், எல்லாப் பற்றுகளையும் முற்றத் துறந்த முனிவராய், பல நாளும் பல திருப்பதிகட்குச்