பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 427 வெண்பாவிலும், ஒன்று கூடுதலாக 11 பாக்கள் உள்ளன. இந்தக் கூடுதலையும் சேர்த்துத்தான் 658 என்னும் எண்ணிக்கை குறிப் பிடப்பட்டுள்ளது, - - இதிலிருந்து தெரிவதாவது:- திரு வாசகத்தில் சில பகுதி களில் சில பாடல்கள் அழிந்தது போலவே சில தலைப்புகளும் அழிந்து போய்க் கிடைக்காமல் இருக்கலாம் அல்லவா? தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பின்வருமாறு ஒரு கருத்து தெரிவித்துள்ளார்:- . - 'சிவப்பிர்காசப் பெருந் திரட்டு' என்னும் தொகை நூலில் அனுபவப் பணை என்னும் தலைப்பில்,திருவாசகத்தைச் சேர்ந்த இரண்டு பாடல்கள் உள்ளன. அவை இன்ப வெள்ளம் என்னும் தொடரால் முடிந்திருப்பதால், அப்பகுதிக்கு இன்பப் பத்து அல்லது இன்ப வெள்ளப்பத்து என்ற பெயர் இருந்திருக்க வேண்டும் - ன்ன்று கூறி, அந்த இரு பாடல்களையும் தந்துள் ளார். அப்பாடல்கள் வருமாறு: 'அன்னையும் ஆயமும் கேண்மின்களோ எனது ஆருயிர் ஆய சிவபெருமான் என்னது யானெனும் இவ்விரண்டும் என்னுளனாய் இருந்தே கவர்ந்தான் முன்னை உறவும் பிறவும் காணேன் மூவுலகும் பரந்து எங்கும் தானாய் இன்ன தளவென்று இயம்ப ஒண்ணா இன்ப வெள்ளத்து எனை இட்டனனே’’ 'வானும் நிலமும் அடையக் கேண்மோ வள்ளல் பெருந்துறை மேய பெம்மான் தானும் தன் தையலும் ஆகி என்தன் சதுரை அழித்து மால் தந்தபோதே ஊனும் உயிரும் உணர்வும் ஒன்றாய் - உரோமம் எல்லாம் சிலிர்ப்பித்து என்னை யானும் என்னை அறியாத வண்ணம் இன்ப வெள்ளத்துள் எனை இட்டனனே'. என்பன அப்பாடல்கள். இது தெ.பொ.மீ. அவர்களின் கருத்து. இது பற்றி அறிஞர்கள் ஆய்க.