பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 தமிழ் நூல் தொகுப்புக் கலை மாந்தர் ஒன்றுகூடி அமர்ந்துள்ள ஒரு கழகக் கூட்டத்தில் பேசும்போது அதற்கென்று ஒரு வகைக் கட்டுப்பாடு உண்டு. ஒழுங்கு முறை உண்டு. தனியொருவரின் எதிரே எளிய உடையு டன் இருக்க முடிகிறது;ஆனால், பலர் குழுமியுள்ள இடத்திற்குச் செல்லுங்கால் உடையில் ஒரளவு கவனம் செலுத்த வேண்டியுள் ளது. ஒரு தேவையைக் கேட்கத் தனியொருவர் வருவதினும், ஒரு குழு வருமாயின் செல்வாக்கு மிகுதியும் உண்டு. இவ்வாறே, தனிப்பாடவினும் ஒரு நூலின் பெயரால் உள்ள பாடலுக்கே சிறப்பு மிகுதி. தனியொருபாடல் தனியொருவரைப் போன் றது; தனிப்பாடல்கள் பல சேர்ந்த தொகைநூல் ஒரு குழுவின் மதிப்புடையது. தனி எழுத்துக்கு மதிப்பு இல்லை-பொருளும் இல்லை; பல எழுத்துக்கள் சேர்ந்த சொல்லுக்கே மதிப்பு உண்டு; பொருளும் உண்டு. அந்தச் சொல்லில் சேர்ந்திருக்கும் பொழுதே தனி எழுத்து மதிப்புப் பெறுகிறது. இன்னும் கேட்டால், தனிச் சொல்லுக்குக்கூட அவ்வளவாக மதிப்பில்லை.போதிய பொருள் பெறுமானம் இல்லை; பல சொற்கள் சேர்ந்த சொற்றொட ருக்கே (வாக்கியத்துக்கே) போதிய மதிப்பு உண்டு - முழுப் பொருள் பெறுமானம் உண்டு. ஒரு வாக்கியத்தில் உள்ளபோதே, ஒரு தனிச்சொல் போதிய மதிப்புப் பெறுகிறது. ஒரு தனிப் பாடல் தனியெழுத்துப் போன்றது; பல தனிப்பாடல்களின் தொகுப்பாகிய தொகை நூல், பல எழுத்துக்களால் ஆன பல சொற்கள் சேர்ந்த சொற்றோடரின் பெறுமான மதிப்பு உடையது . தனி மலருக்குப் போதிய மதிப்பு இல்லை. அதை மோந்து பார்த்துத் துக்கி யெறிந்து விடுவர். பல மலர்களைத் தொடுத்த மாலைக்கே மதிப்பு மிகுதி. மாலைக்குள் அடங்கி யிருக்கும் போதுதான் தனித்தனி மலர்கள் மதிப்புப் பெறுகின் றன. அது மட்டுமன்று; மாலையாகக் கட்டிய பிறகே தனி மலர்கள் போதிய பாதுகாப்புப் பெறுகின்றன. தனித்துக் கிடக்குமேல் ஒல்லையில் சிதைந்தொழியும். கட்டப்பட்ட மாலையோ கவனமாக எடுத்து வைத்துக் காக்கப்படுகிறது. மலருக்கும் மாலைக்கும் உள்ள தொடர்பு போன்றதே, தனிப் பாடலுக்கும் தொகைநூலுக்கும் உள்ள தொடர்புமாகும்.