பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/450

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


428 தமிழ் நூல் தொகுப்புக் கலை இயற்பெயர் ஆய்வு திருவாசகத்தின் இயற்பெயர் பற்றி ஈண்டு ஒர் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இயற்பெயர் என்பது முதலில் இட்ட பெயராகும். பெற்றோர் தம் பிள்ளைக்கு முதலில் இட்ட பெயர் இயற்பெயராகும்; பிறகு அப்பிள்ளைக்கே வேறு வேறு பெயர்கள் வழங்கப்படலாம். அதேபோல், ஒரு நூலுக்கு அதன் ஆசிரியர் முதலில் இட்ட பெயர் இயற்பெயர்; வேறு காரணம் பற்றிப் பிறர் பின்னர் இட்ட பெயரும் அந்நூலுக்கு இருப்பதுண்டு. நாளடைவில் ஆசிரியர் இட்ட இயற்பெயர் மறைய, பின்னர்ப் பிறர் இட்ட பெயரே நிலைத்து விடுவதும் உண்டு. திருவாசக நூற்பெயரும் இன்னதேயாம். சிவ புராணம்: மாணிக்க வாசகர் தாம் பல்வேறு பொழுதுகளில் பல இடங் களில்-பல தலைப்புகளில் பாடப்பட்ட பாடல்களைப் பின்னர் அவரே தொகுத்துச் சிவனை எழுதச் செய்தார்-என்பது கதை. சிவன் வந்து எழுதியில்லா விடினும், யாரோ ஒரு பெரியார் எழுதியிருக்கிறார் என்றாவது கொள்ளலாம். உதிரிப் பாடல் களை ஒரு நூலாகத் தொகுத்துச் சொன்னபோது, அந்நூலுக் குச் சிவ புராணம் என்னும் பெயரை மாணிக்க வாசகர் முதலில் இட்டிருக்க வேண்டும். இதற்கு உரிய விளக்கமாவது: இந்நூலில், அண்டப்பகுதி என்று தொடங்கும் பகுதிக்கு 'திருவண்டப் பகுதி என்றும், போற்றி - போற்றி என்பது திரும்பத் திரும்ப வந்துள்ள பகுதிக்குப் போற்றித் திரு வகவல்’ என்றும், “எம்பாவாய்' என்ற ஈற்றில் முடியும் பகுதிக்கு திரு வெம்பாவை’ என்றும், இவைபோலவே அமைந்திருக்கும் மற்ற பகுதிகட்கு ஏற்ற பெயர்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், முதல் பகுதிக்குச் சிவ புராணம் என்னும் பெயர் தரப்பட்டது ஏன்? இந்தப் பகுதியில், "சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுது மோய உரைப்பன் யான்' என்று உள்ள அடிகளைக் கொண்டு, சிவ புராணம்’ என்னும்