பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/454

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


432 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் பெயரும், சேக்கிழார் நூலின் பெரிய புராணம் என்னும் பெயரும் சிறப்புப் பெயர்களே - என்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. ஒருவர் பாடிய பல பாக்களின் தொகுப்பு ஆதலின், இந் நூலைத் தனி மலர் மாலை என்னும் வகையில் அடக்கலாம். மாணிக்கவாசகரின் காலம் மூன்றாம் நூற்றாண்டு என் றும், ஐந்தாம் நூற்றாண்டு என்றும், தேவார ஆசிரியர் மூவ ருக்கு முற்பட்ட காலமாகப் பலரால் பலவாறு சொல்லப்பட் டுள்ளது. மாணிக்க வாசகர் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி யினர் ஆவார். (இதனை யான் எனது கெடிலக்கரை நாக ரிகம் என்னும் பெரிய நூலில் விரிவாக விளக்கியுள்ளேன்). எனவே, திருவாசகம் என்னும் தொகை நூலின் காலம் பத் தாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். எப்படியும், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, அதற்கும் முன்னால் திருவாசகத்தை நகர்த்த முடியாது. பத்துப் பெயர்கள்: திருவாசகத்தில் ஐம்பத்தொரு பகுதிகள் உள்ளன. இவற் றுள், திருவெம்பாவை, திருவம்மானை, திருப் பொற்சுண்ணம் திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூ வல்லி, முதலிய பத்துகள் - பகுதிகள் ஒவ்வொரு பாட்டின் இறுதியில் உள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளன. இதன் முன்னோடியாய், கழக இலக்கியமாகிய ஐங்குறுநூற்றில் ஓர் அமைப்பு உள்ளது. இந்நூலின் முதல் பத்தின் பத்துப் பாடல் களின் இறுதிகளும் "வேட்டேமே” என்னும் சொல்லால் முடி கிறது. எனவே, இதற்கு வேட்கைப்பத்து' என்னும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை அடியொற்றினாற் போல்; திரு வாசகப் பகுதிகள் பலவற்றின் பெயர்கள் அமைந்துள்ளன வன்றோ? திருவாசக அருள் முறைத் திரட்டு திருவாசகத்திலிருந்து சில பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட் டுச் சிறு சிறு தொகுப்பாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்றே இந்தத்திரட்டு. இத்தத் திரட்டில், திருவாசகத்தின் முதல்நான்கு தலைப்பு