பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்பது, இறைவன் புகழைப் பாடிய பா என்றும், இறைவனை இசையோடு - பண்ணோடு பாடும் பா என்றும் பொருள்படும். பாடல்கட்குப் பண் அமைத்திருப்பதால் பண்ணோடு பாடும் Ա Ոr என்பது மிகவும் பொருந்தும். இறைவன் புகழைப் பண் ணோடு பாடும் பா என இணைத்தும் பொருள் கொள்ள லாம். - திருவிசைப் பாவில் மொத்தம் 301 பாடல்கள் உள்ளன. இவை 28 பதிகங்களாக அடக்கப்பட்டுள்ளன. பின் வரும் திருப்பதிகளைப் பற்றிப் பாடப் பட்ட பாக்கள் இவை. கங்கை கொண்ட சோளேச்சுரம், தஞ்சை இராச ராசேச் சுரம், திருக் களந்தை ஆதித்தேச்சுரம், திருக் கீழ்க் கோட்டுர் மணியம்பலம், திருச் சாட்டியக் குடி, திருப்பூவணம் திருமுகத் தலை, திருவாரூர், திருவாவடுதுறை, திருவிடைக் கழி, திரு விடை மருதூர், திருவிழிமிழலை, திரை லோக்கிய சுந்தரம், சிதம்பரம் - என்பன பாடப் பெற்ற பதிகளாகும். திருப் பல்லாண்டு - சேந்தனார் பாடிய பதின் மூன்று திருப்பல்லாண்டுப் பாடல்கள், இத்தொகுப்பில் பத்தாவது பகுதியாகச் சேர்க்கப் பட்டுள்ள, இவை, பல்லாண்டு வாழ்த்து கூறும் பாடல்கள். - ஒன்பதாம் திருமுறையைத் 'திருவிசைப்பா - திருப் பல்லாண்டு' என்னும் பெயரால் வழங்குவதுண்டு. சைவக் கோயில்களில் 'ஐந்து இறைநூல் பாடல்கள் பாடப்படுவதுண்டு. இதனை வடமொழியில் பஞ்ச புராணம்’ என்பவர். ஐந்தாவன: தேவாரப்பாடல் ஒன்று - திரு வாசகப் பாடல் ஒன்று - திருவிசைப்பாப் பாடல் ஒன்று - திருப்பல்லாண் டுப் பாடல் ஒன்று - பெரிய புராணம் போன்ற ஏதாவது ஒரு புராணப் பாடல் ஒன்று (பெரும் பாலும் பெரிய புராணப் பாடல் இடம் பெறும்). இவையே பஞ்ச புராணம் எனப்படும். இந்த அமைப்பைக்கொண்டு, தேவாரம்-திருவாசகம் போலவே, திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் சைவக் கோயில்களில் சிறப்பிடம் பெற்றுள்ளன என அறியலாம். சமசு கிருத அர்ச்சனை - தோத்திரம் எல்லாம் முடிந்த பின், இந்த ஐந்து தமிழ்ப் பாடல்கள் பாடுவதைக் கண்டு, தமிழ்