பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 435 நாட்டுக் கோயில்களில் தமிழுக்கு முதலிடம் இல்லையே - சமசு கிருதத்திற்குப் பின்இடம் தானே தந்துள்ளனர்- என்று சிலர் வருந்துவது உண்டு. தமிழ்ப் பாடல்களை அறவே ஒழித்துக் கட்டாமல், ஐந்து தமிழ்ப் பாடல்கட்காவது இடம் தந்துள் ளனரே என்று ஆறுதலும் தேறுதலும் அடைய வேண்டும் இதனைத் தொகுத்தவரும் நம்பியாண்டார் நம்பியே. எனவே, இத்தொகுப்பின் காலம், பத்து-பதினொன்றாம் நூற். றாண்டாகும். இது பலர் நூல்களின் தொகுப்பாதலின் பன் மணித் திரள் என்னும் வகையில் அடங்கும். அச்சுப்பதிப்பு திருப்பனந்தாள்.காசிமடம் 1949-சூன் (விரோதிவைகாசி) திங்களில், சென்னை கபீர் அச்சுக் கடத்தில் அச்சிட்ட பதிப்பு உள்ளது. இதன் மூன்றாம் பதிப்பு அதே அச்சுக் கூடத்தில் 1952 - சூன் (நந்தன - வைகாசி) திங்களில் அச்சிடப்பட்டு வெளி வந்தது. ". திரு மந்திர மாலை திரு முலர் இயற்றிய திருமந்திரம் என்னும் நூலுக்குத் தமிழ் மூவாயிரம் - மூவாயிரம் தமிழ் - திருமந்திரமாலை என் னும் பெயர்கள் உள்ளன. 'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்'எனத் தன்வரலாறு கூறும் பாயிரப் பகுதியில் திருமூலரே கூறியுள்ளமை கொண்டு மூவாயிரம் தமிழ்' என்னும் பெயர் உள்ளமை புலப்படும். இதனையே 'தமிழ் மூவாயிரம்’ எனச் சேக்கிழார் கூறுகிறார் திருமந்திரப் பாயிரப் பகுதியிலே திருமூலரே கூறியுள்ள 'மறப்பிலிர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப் பொடுங் கூடிநின்று ஓதலும் ஆமே” என்னும் பாடல் பகுதியைக் கொண்டு, இந்நூலுக்கு திரு மந்திர மாலை என்னும் பெயரும் உண்டு எனச் சிலர் கூறி யுள்ளனர். சைவத் திரு முறைகள் பன்னிரண்டனுள், இந்நூல் பத் தாம் திருமுறையாக நிறுத்தப்பெற்றுள்ளது.