பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/459

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் 437 தவத்தில் இருந்தார்; ஆண்டுக்கு ஒரு பாட்டுப் பாடிப் பின் யோகத்தில் ஆழ்ந்து விடுவார். இவ்வாறு பல ஆண்டு காலம் இருந்து அவர்பாடிய மூவாயிரம் பாடல்களின் தொகுப்புே இந்த நூல்- என்பது சேக்கிழாரின் பெரிய புராண வரலாறு. திருமூலர் பற்பல ஆண்டுகளில் பாடப்பட்ட உதிரிப்பாடல் கள் பின்னர் இந்த வடிவில் தொகுக்கப்பட்டதால் திரு மந்திர மாலை என்னும் தொகை நூற்பெயர் பெற்றது போலும்! . பொறுத்தருள வேண்டும் - திருமூலர் பாயிரப் பகுதியில், குடிகாரன் கூறுவதைப் போல் கண்டவாறு-பலவாறு - பல செய்திகளைக் கூறியுள்ளார். அவை நம்பத் தக்கனவா? 'நந்தி அருளாலே மூலனை நாடி” (68,92), "ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே' (74), 'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி'(80), 'சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே' (73), 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே” (81), 'வான் வழியூடு வந்தேனே' (83), "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” (85) முதலியன் பாயிரப் பகுதியில் உள்ளனவாகும். இந் நூலில், திருமூலர் பாடாத பாடல்கள் சில இடைச் செருகலாகப் பிற ரால் பாடப்பட்டுச் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘ஏழுகோடி யுகம் இருந்தேன்', 'வான் வழியூடு வந்தேன்’ என் பன உண்மையா? இவை போன்ற பகுதிகளைக் கொண்டுதான் மேற்கூறிய பெரிய புராணக்கதை கட்டப்பட்டுள்ளது. கயிலாயத்திலிருந்து வந்த யோகி மூலன் என்னும் இடை யன் உடம்பில் புகுந்து கொண்டு இந்நூலை இயற்றினார் என் பது - நூற்றுக்குநூறு முழுக்கற்பனையாகும். கயிலையையே அடைந்திருந்த முனிவர் கீழே வந்தது ஏன்? உண்மை யாதாக இருக்கலாம். இதோ: மூலன் என்னும் இடையன் மாடு மேய்த்து இருக்கலாம். நாளடைவில் அவன் கல்வி கேள்விகளில் சிறந்து மெய்யுணர்வு