பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூல் தொகுப்புக் கலை 21 மவர்மாலை யென்றென்ன..! தனித்தனி ஒன்டான் மணிகளால் தொகுக்கப்பட்ட (நவரத்தின) மணிமாலையினையும் ஈண்டு ஒப்பிட்டுக் கொள்ளலாம். பல பூக்களின் தொகுப்பே பூமாலை; பல பாக்களின் தொகுப்பாகிய பாமாலையே தொகைநூல் எனவேதான், உதிரியாகக் கிடந்து நாளடைவில் மறைந்து ஒழிந்து போகாமல் நிலைத்து நிற்பதற்காகவும், திக்கற்றதாகக் குறைந்து மதிப்பிடப்படாமல் இன்ன நூலைச் சார்ந்தது என்னும் பெருமைபெற்று உயர்வெய்தவும், முன்னோர்கள் உதிரியான தனிப்பாடல்களை ஒரு நூலாகத் தொகுக்கும் அரும்பெரும் பணியை மேற்கொண்டனர். இந்தப்பணி மிகவும் இன்றியமையாததல்லவா? இறைப்பது எளிது-பொறுக்குவது கடினம்’ என்பது பழமொழி யாயிற்றே! திரட்டுக்கம்: - மக்கள் உதிரிப் பாடல்களைத் திரட்டி வைப்பதில் உள்ள ஒர் இயற்கை உண்மையையும் ஈண்டு மறப்பதற்கில்லை. எதையும் சேர்த்துவைக்கும் இயற்கைப் பழக்கம் மக்களுக்கு உண்டு. சிறு குழந்தைமுதல் முதியவர்வரை இந்தப் பழக்கத் திற்கு எவரும் விலக்கல்லர். சிறார்கள் எந்தப் பொருளைப் பார்த்தாலும் தமக்கு வேண்டும் என்று எடுத்துக்கொண்டு முன்பு திரட்டி வைத்திருக்கின்ற பொருள்களோடு இதனையும் சேர்த்து வைத்துக்கொள்வர். சோடாத்தக்கைகள், திரைப்பட விளம்பரத் தாள்கள், அஞ்சல் தலைகள், தீப்பெட்டிப் படங்கள், கோலிக்குண்டுகள், பம்பரங்கள், பட்டங்கள், தகர-இரும்புச் சாமான் வகைகள், பொம்மைகள், பல்வேறு விளையாட்டுப் பொருள்கள், இன்ன பிறவற்றை நிரம்பத் திரட்டிச் சேர்த்து வைப்பதில் சிறார்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு அளவேயில்லை. சிறார்கட்கு வகைகளும் பலவாயிருக்க வேண்டும்; ஒவ்வொரு வகையிலும் எண்ணிக்கையும் மிகுதியாயிருக்க வேண்டும். எத்தனை வகைப் பொருள்களையும் சேர்க்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஒவ்வொரு வகையிலும் எத்தனை கிடைத்தா லும் அவர்தம் உள்ளம் நிறைவு பெறாது. இன்னும் திரட்டிச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பேரவா பெரு கிக் கொண்டே யிருக்கும். இது சிறார்களின் இயல்பு.