பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/460

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


438 - தமிழ் நூல் தொகுப்புக் கலை பெற்று உயர்ந்த கருத்துகளைப் பொழியும் பேரறிவும் பேராற்ற லும் பெற்றிருக்கலாம். அதனால், திருமந்திரம் என்னும் உயரிய நூலை இயற்றி யிருக்கலாம். ஆனால், ஒர் இடையன் செய்ததாக ஒத்துக்கொண்டு இடையனுக்குப் பெருமை கொடுப்பதா என்ற குல வேறுபாட் டுப் பொறாமையால், மூலன் என்னும் இடையன் செய்ய வில்லை என மேற்குலத்தினர் கூறி, முலன் உடம்பில் யோகி புகுந்ததாகப் போலி நாடகம் ஆடியுள்ளனர். இன்னோர் இடையனுக்குப் பெருமைதர எங்கே ஒத்துக் கொண்டார்கள்? அ உ அறியா அறிவு இல் இடை மகனே (யாப்பருங்கலம்-7,37,95 நூற்பாக்களின் உரை மேற்கோள்) என்று பாடியவர்கள் தானே! சுட்ட பழம், வேண்டுமா-சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஒளவையாரை மடக்கிய உண்மையான இடைச் சிறுவனை முருகனாக ஆக்கிய வரலாறு தெரியாததா? வடமொழியில் மாபெரும் புலவனும் இடைக்குலத்தவனும் ஆகிய காளிதாசன், தன் நாக்கில் காளி எழுதியதாலேயே பல சிறந்த நூல்கள். எழுதினான் என்று கூறப்படும். கட்டுக் கதை யும் அறியாததா? (யான் ஆயர்பாடிக் கண்ணனிடம் போக மாட்டேன்; யான் இடைக்குலத்தானல்லேன்; நடுநிலைமை யுடன் எழுதுகிறேன்). * - - இடைக்குலக் காளிதாசன் செவ்விய நூல்கள் பல எழுதியி ருக்கும்போது, இடைக்குல மூலன் மட்டும் திரு மந்திரம் இயற்ற முடியாதா? ஆய்க அறிஞர்கள்! திருமூலரால் பல காலங்களில் இயற்றப்பெற்ற பாடல் களின், தொகுப்பாதலின், திருமந்திர மாலை நூலைத் தனி மலர் மாலை' என்னும் வகைக்குள் அடக்கலாம்: - காலம் ஏழு கோடி யுகம் இருந்ததாகக் கூறும் பாடலைக் கொண்டு திருமூலர் கி.மு. ஆறாயிரத்தில் இருந்தவர் என்று சிலரும்,இன் னும் பல்வேறு காலத்தவர் என்று சிலரும் பகர்கின்றனர். நூல்