பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

441 இடைக்காலம் 12. கம்பியாண்டார் நம்பி 31. விநாயகர் திரு விரட்டை மணி மாலை 32. கோயில் திருப் பண்ணியர் விருத்தம் 33. திருத் தொண்டர் திரு வந்தாதி 34. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 35. ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 36. ஆளுடைய பிள்ளையார் திரு மும்மணிக் கோவை 37. ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை 38. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் 39. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 40. திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை மேலே, ஆசிரியர்கள் பன்னிருவர் பெயர்களும் நூல்கள் நாற்பதின் பெயர்களும் முறையே தரப்பெற்றுள்ளன. - பதினோராம் திருமுறை என்னும் பெயரில் இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டர் நம்பியாவார். இந்நூலின் மொத்தப் பாடல்கள் 1393 ஆகும். தொகுப்பாசிரியர் நம்பியாண்டார் நம்பி என்பதைத் திரு முறை கண்ட புராணத்தில் உள்ள பின்வரும் பாடலால் அறிய லாம். - வைத்ததற்பின் நம்பிகழல் மன்னர்பிரான் மகிழ்க் திறைஞ்சிச் சித்திதரும் இறைமொழிந்த திருப்பாசுர முதலாம் உய்த்த பதிகங்களையும் ஒரு முறையாய்ச் செய்க எனப் பத்திதரும் திருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்' (27) பலர் இயற்றிய பல நூல்க்ளின் தொகுப்பு ஆதலின், இந் நூலைப் பன்மாலைத் திரள் என்னும் வகையில் அடக்கலாம். காலம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பியாரால் தொகுக்கப் பெற்ற இந்நூலின் காலமும் அவர்