பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 தமிழ் நூல் தொகுப்புக்கலை காலமே யாம். அதாவது-ஒவ்வொரு நூலும் இயற்றப்பெற்ற காலம் அன்று அது. நாற்பது நூல்களும் பல காலங்களில் பல ரால் இயற்றப்பட்டவை யாகும். நாற்பதையும் தொகுத்துப் பதினோராம் திருமுறை எனப் பெயர் தந்த காலமே, பத்து - பதினொன்றாம் நூற்றாண்டுக் காலமாகும். இதைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி பார்த்தார்: தம் காலத்தில் இருந்த சைவ நூல்களுள் சிறந்தவை சிதறிக் கிடப்பதை அறிந்தார் - சிந்தாமல் சிதறாமல் தண்ணிரை அணைக்குள் அடக்கி வைத்து வேண்டிய போது பயன்படுத்திக் கொள்வதுபோல், இந்த நாற்பது நூல்களையும் பதினோராம் திருமுறை என்னும் பெயராகிய அணைக்குள் திரட்டி வைத்தார். இல்லாவிடின், இந்நூல்களுள் சில அல்லது பலவற்றின் பெயர் கள் கூட அறியப்படாமலே அடித்துக்கொண்டு போயிருக்கும். இதில் உள்ள நூலாசிரியர்கள் சிலரின் பெயர்களை நோக் குங்கால் வியப்பு உண்டாகிறது. முதலாமவர், திருவாலவா யுடையார் என்னும் சிவனாம். இவர், பாணபத்திரன் என்ப வனுக்காகச் சேரமான் பெருமாள் நாயனார் என்னும் சேர மன்னனுக்கு மடல் எழுதி அனுப்பியுள்ளாராம். இதற்குத் திரு முகப் பாசுரம் என்பது பெயர்.திருமுகம் : கடிதம்; பாசுரம்=பா, கடிதத்திற்குத் திருமுகம் எனப் பெயர் கொடுத்திருப்பது அழகு. அப்பாசுரத்தை மட்டும் பார்ப்போமே! 'மதிமலி புலிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால்கிற வரிச்சிறகு அன்னம் பயில்பொழில் ஆல வாயின் ஆ மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு ஒருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க: பாண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன் பால் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே" என்பது பாடல். உங்களை என்பதற்குப் பதிலாகத் தங்களை