பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/466

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


444 தமிழ் நூல் தொகுப்புக் கலை 1870 (விபவ - மாசி) ஆம் ஆண்டிலும், 1871 (சுக்கில தை) ஆம் ஆண்டிலும் வெளியிடப் பெற்றவை. மூன்றாம் பதிப்பு 1933 (பூரீமுக-வைகாசி) ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. 1870 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ள விவரம் வருமாறு: 'உ. திருச்சிற்றம்பலம்- பதினோராம் திருமுறைப் பிரபந்தங்கள்இத் திருமுறையுள் அடங்கிய - திருமுகப் பாசுரம், திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, க்ஷேத்திரத் திரு வெண்பா, பொன் வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திரு வாதியுலா, கயிலை பாதி காளத்தி பாதித் திருவந்தாதி யாகிய திருப்பிரபந்தங்கள் - திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள் மாணாக்கருள் ஒருவராகிய சென்னைக் கவர்ன்மெண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவர் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டி யாரால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டுபூவிருந்தவல்லி சுப்பராய முதலியர் குமாரராகிய கன்னியப்ப முதலியாரால் - சென்னை சி.டிக்குரூஸ்து மலைச்சாலையில் அத்தி நீயம் அன்ட் டேவி நியூஸ் பிரான்ச் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது-விபவ வருடம்-மாசிமாதம்- Registered copyright - பதினோராந்திருமுறையுளடங்கிய மற்றைத் திருப் பிரபந்தங்கள் இப்போது அச்சிட்டு வருகின்றன. அவை விரைவில் வெளியிடப்படும்.' 1870 ஆம் ஆண்டுப் பதிப்பின் முகப்புப் பக்கத்தில் உள்ளது இந்த விவரம். 1871 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ள விவரமாவது:'உ. திருச்சிற்றம்பலம் - பதினோராந் திருமுறை - இத்திரு முறையு ளடங்கிய திருப்பாசுர முதலிய நாற்பது திருப்பிர பந்தங்களும்....” என்பது வரையும் 1871 ஆம் ஆண்டுப் பதிப்பில் புதிது; பின்னால் உள்ள விவரம் அனைத்தும் ஒரெழுத்துகூட மாறா மல் 1870 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளவாறே உள்ளன. இறுதியில் மட்டும், சுக்கில வருடம்-தைமாதம் என்னும் ஆண்டும் நாளும் மட்டும் மாறியுள்ளன.