பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/469

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இடைக்காலம் - 447 தமிழ் மாலைகள் 'தமிழ் மாலைகள்' என்னும் தொகைப் பெயரால் குறிப் பிடப்பெறும் தொகை நூல் எது என்பதை, தேசிகர் இயற்றிய தேசிகப் பிரபந்தம் என்னும் நூலிலுள்ள பின்வரும் பாடலால் அறியலாம். - - * * 'பொய்கைமுனி பூதத்தார் பேயாழ் வார்தண் பொருநல்வரும் குருகேசன் விட்டு சித்தன் துய்யகுல சேகரன் நல்பான நாதன் - தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி வையமெலாம் மறைவிளங்க வாள்வே லேந்தும் மங்கையர் கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்யதமிழ் மாலைகள், நாம் தெளிய ஒதித் தெளியாத மறைகிலங்கள் தெளிகின் றோமே” (தேசிகப் பிரபந்தம் - அதிகார சங்கிரகம் - 1) இந்தப் பாடலில், ஆழ்வார்களைக் குறிப்பிட்டு என்றிவர் கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலைகள்” என்று குறிப் பிட்டிருப்பது ஆழ்வார்களின் பாடல் தொகுப்பாகிய நாலா பிரத் திவ்வியப் பிரபந்தம்' என்னும் அரிய பெரிய தொகை நூலாகும். ஆழ்வார்கள் பன்னிருவர் எனக் குறிப்பிடப்பட் டிருப்பினும், இந்தப் பாடலில் மதுரகவியாழ்வார், ஆண்டாள் ஆகிய இருவரையும் சேர்க்காமல் பதின்மரை மட்டும் குறிப் பிட்டுள்ளார் பாடல் ஆசிரியர். இது பற்றிப் பிற கு பார்க்க லாம். கால வாரித் தொகுப்பு முறை : ஆழ்வார்கள் பன்னிருவரின் பெயர்களையும், அவர்கள் இயற்றியுள்ள நூற்பெயர்களையும், ஒவ்வொரு நூற்பாடல் களின் எண்ணிக்கையையும் ஆழ்வார்களின் கால முறைப்படி கீழே காணலாம்: காலம் 5 - 6 என்று குறிப்பிட்டிருப்பின், ஐந் தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்ததாகக் கொள்ளவேண்டும். மற்ற எண் கட்கும் இவ்வாறே கொள்க: - 1. பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி (நூல்) - பாடல் எண்ணிக்கை 100 காலம் 5,6. 2. பூதத் தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - 100 - காலம்: 5,6.