பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 தமிழ் நூல் தொகுப்புக் கலை சிறார்களின் பேரால் இவ்வளவும் சொன்னோம். இவ்வள வையும் எல்லா வயதினருக்கும் எல்லாத்துறை மாந்தருக்கும் பொருத்திக் கொள்ளவேண்டும். அந்தந்த வயதினரும், அந்தந் தத் துறையினரும், அவரவருக்கேற்பப் பொருள்களை நிரம்பத் திரட்டிச் சேர்த்து வைத்துக்கொள்ள முயல்கின்றனர்; எத்தனை வீடுகள், எத்தனை காணி நிலங்கள், எவ்வளவு காசு பணங்கள், இன்னும் எத்தனை வகையான பொருள்கள் சேர்ந்தாலும் நெஞ்சம் நிறைவு பெறுவதில்லை. சிலர் பிள்ளை பெறுவதிலும் நிறைவுற்றார் இலர். சிலர் எத்தனை நாள்காட்டிகள் (காலண்டர்கள்) கிடைத்தாலும் நிறைவுறாமல், மேலும் பல பெற விரும்பிப் பல கடைகளிலும் நிறுவனங்களிலும் படி ஏறிப் பல்லிளித்துக் கேட்டு நிற்கும் கண்கொள்ளாக்காட்சியை என்றும் மறக்கமுடியாது. பெண்களோ, எத்தனை வகையான உலோகங் களில், எத்தனை வகையான பாத்திரங்களில் எத்தனை வாங் கினாலும், எவ்வளவு ஆடை அணிகலன்கள் பெற்றிருந்தாலும் உள்ளம் நிறைவுறுவதில்லை. இன்னும் திரட்ட வேண்டும்; மேன் மேலுஞ் சேர்க்கவேண்டும் என்றே விரும்புகின்றனர். இந்த இயல்பு எல்லாவகை மாந்தர்க்கும் நிரம்ப உண்டு. இவ்வாறு பொருள்களைத் திரட்டுவதில் உள்ள ஊக்கத் திற்குத் திரட்டு ஊக்கம் (Acquisition) என்று உளவியலார் (Psychologists) பெயரிட்டுள்ளனர். பிறந்த குழந்தை முதல் எல்லாருக்குமே உணவு ஊக்கம், போர் ஊக்கம், திரட்டு ஊக் கம்,படைப்பு ஊக்கம், காதல் ஊக்கம், குழு ஊக்கம் முதலிய பதினான்கு ஊக்கங்கள் உள்ளனவாம். இவை உரிய வயதில் ஒவ்வொன்றாய்த் தோன்றத் தொடங்கும். இந்த ஊக்கங்கட் குப் பொதுவாக இயல்பு ஊக்கங்கள் (lnstincts) என்று உளவியலார் பெயர் சூட்டியுள்ளனர். தூய்மை செய்தல்: இந்த ஊக்கங்களைப் பற்றி ஒரு நல்ல கருத்து உளவி யலாரால் உரைக்கப்பட்டுள்ளது; இந்த ஊக்கங்கட்கு அடிமை யாகி இவற்றின் போக்கில் விட்டுவிடலாகாது. இவற்றை நல் வழியில் திருப்பிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எடுத்துக் காட்டாகப் போர் ஊக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். ஒரு